பக்கம் எண் :

காந்தருவ தத்தையார் இலம்பகம் 436 

747 லெண்ணிய தெண்ணி மன்ன
  ரிகன்மலைந் தெழுந்த போழ்திற்
றண்ணிய சிறிய வெய்ய
  தழற்சொலால் சாற்று கின்றான்.

   (இ - ள்.) பண்இயல் யானை மேலான் பதுமுகன் - புனைதல் பொருந்திய யானைமேல் அமர்ந்த பதுமுகன்; பரவைத் தானை கண்ணியது உணர்ந்து - பரவிய அரசர் படை போரில்இறங்க நினைத்ததையும் அறிந்து; கல்லாக் கடடியங்காரன் நெஞ்சில் எண்ணியது எண்ணி - மேலும் கல்வியிலாத கட்டியங்காரன், 'கள்ளராற் புலியை ஏறு காணிய' உள்ளத்திற் கருதியதையும் ஆராய்ந்து; மன்னர் இகல் மலைந்து எழுந்த போழ்தில் - அரசர்கள் போரிலே மாறுபட்டு எழுந்த அளவிலே; தண்ணிய சிறிய வெய்ய தழற் சொலால் சாற்றுகின்றான் - சாம பேத தான தண்டங் குறித்த சொற்களால் உகைகின்றான்.

 

   (வி - ம்.) சாமம் : இனிதாகக் கூறுவதால் 'தண்ணிய' சொல், தண்ணிய - குளிர்ந்த. பேதம்: மென்மையாலும் வன்மையாலும் உள்ளத்தைப் பேதித்தல். அது பொய்யும் மெய்யும் கூறிப் பேதித்தலிற், 'சிறிய' என்றார். தானம் : பகைவர் மனம் மகிழக் கொடுத்தல். அஃது அவர் விரும்பப்படுதலின், 'வெய்ய' என்றார். வெய்ய - விரும்பிய. 'நின் வெய்ய னாயின்' (கலி. 107) என்றாற்போல. தண்டம் : பின்பு அவர் ஆகாமல் அழித்தே விடுதலின், 'தழல்' என்றார்.

( 255 )
748 இசையினி லிவட்குத் தோற்றாம்
  யானையால் வேறு மென்னி
னிசைவதொன் றன்று கண்டீ
  ரிதனையா னிரந்து சொன்னேன்
வசையுடைத் தரசர்க் கெல்லாம்
  வழிமுறை வந்த வாறே
திசைமுகம் படர்க வல்லே
  1தீத்தொட்டாற் சுடுவ தன்றே.

   (இ - ள்.) இவட்கு இசையினில் தோற்றாம் - இவளுக்கு இசையினால் தோற்ற நாம்; யானையால் வேறும் என்னின் இசைவது ஒன்று அன்று - யானையால் வெல்வோம் என்று கருதின் அது பொருந்தக் கூடிய தொன்றன்று; வசை உடைத்துக் கண்டீர் - மற்றும் அது பழியுடைய தென்றறிவீர்களாக; தீத்தொட்டால் மட்டும் சுடுவதன்றோ? (ஆனால், பிறர்மனை நயக்கும் தீ நினைப்பினும் சுடுவதாகும்) இதனை யான் இரந்து சொன

 

1. தீண்டினார்தமைத் தீச்சுடும் (சீவக - 250)