பக்கம் எண் :

காந்தருவ தத்தையார் இலம்பகம் 439 

அல்லால் கூடுதல் நுங்கட்கு ஆமோ? - கொள்வதற்கு வருந்திப் போவதை யன்றித் தழுவுதல் உங்களுக்கு இயலுமோ?

 

   (வி - ம்.) ஏறுபோல் எருது நுகராமையின், அதனோடு அரசரை உவமித்தான்.

 

   இனம் என்றது பதுமுகன் முதலியோரை. உழப்பெருது - உழுதிளைத்த காளை.

( 259 )
752 எழுந்துவிண் படருஞ் சிங்கம்
  பெட்டைமே லிவர்ந்து நின்றான்
மழுங்கமேற் சென்று பாய்தன்
  மறப்புலி தனக்கு மாமோ
கொழுங்கயற் கண்ணி னாளைச்
  சீவக குமரன் சூழ்ந்தா
லழுங்கச்சென் றணைதல் பேய்காள்
  அனங்கற்கு மாவ துண்டே.

   (இ - ள்.) எழுந்து விண்படரும் சிங்கம் பெட்டைமேல் இவர்ந்து நின்றால் - எழுந்து விண்ணிற் படரும் சிங்கம் பெட்டையை விரும்பி நின்றால்; மேற்சென்று மழுங்கப் பாய்தல் மறப்புலி தனக்கும் ஆமோ?- மேலே சென்று அது கெடுமாறு பாய்தல் வீரப்புலிக்கும் இயலுமோ?; கொழுங்கயல் கண்ணினாளைச் சீவக குமரன் சூழ்ந்தால் - வளமுறுங் கயற் கண்ணாளைச் சீவகன் தழுவி நின்றால்; பேய்காள்! அழுங்கச் சென்று அணைதல் அனங்கற்கும் ஆவது உண்டே? - பேய்களே! சீவகன் வருந்தச் சென்று தழுவுதல் காமனுக்கும் ஆவதொரு காரியம் இல்லை.

 

   (வி - ம்.) உழப் பெருது என வெறுக்கக் கூறியவன் புலி என உயர்த்துக் கூறி அவ்விதமேனும் விடுவித்தல் அரிது என்றான். 'ஒட்டகம் குதிரை கழுதை மரை யிவை - பெட்டை யென்னும் பெயர்க்கொடைக் குரிய' (தொல் - மரபு - 52) என்பதனுள், 'கொடை' என்றதனாற் சிங்கத்திற்கும் பெட்டை கொள்க. தண்டித்து விடுக்க வேண்டுதலின், 'பேய்காள்' என்றான்.

( 260 )
753 மத்திரிப் புடைய நாகம்
  வாய்வழி கடாத்த தாகி
யுத்தமப் பிடிக்க ணின்றா
  லுடற்றுதல் களபக் காமே
பத்தினிப் பாவை நம்பி
  சீவகன் பால ளானா
லத்திறங் கருதி யூக்க
  லரசிர்கா ணுங்கட் காமோ.