| நாமகள் இலம்பகம் | 
44  | 
  | 
|  68 | 
பாசவல் லிடிப்பவ ருலக்கை வாழைப் பல்பழ |  
|   | 
மாசினி வருக்கைமா தடிந்துதேங் கனியுதிர்த் |  
|   | 
தூசலாடு பைங்கமுகு தெங்கினொண் பழம்பரீஇ |  
|   | 
வாசத்தாழை சண்பகத்தின் வான்மலர்க ணக்குமே. | 
 
 
 | 
| 
    (இ - ள்.) பாசவல் இடிப்பவர் உலக்கை - புதிய அவலை இடிப்பவரின் உலக்கை ; வாழைப் பல்பழம் ஆசினி வருக்கை மா தடிந்து தேன்கனி உதிர்த்து - பல வாழைப் பழங்களை (உதிர்த்து) ஆசினி வருக்கை மா ஆகியவற்றை முறித்து, அவற்றின் பழங்களையும் உதிர்த்து; ஊசல் ஆடு பைங்கமுகு தெங்கின் ஒண்பழம் பெரீஇ - அசைகின்ற கமுகின் பழத்தையும் தெங்கின் பழத்தையும்1. பரிந்து ; வாசம் தாழை சண்பகத்தின் வான்மலர்கள் நக்கும் - மணமுறும் தாழை மலரையும் சண்பக மலரையும் தடவும். 
 | 
  | 
| 
    (வி - ம்.) எனவே, ஏனையவும் பயன்தரும் என நிலநன்மை கூறினார். 
 | 
  | 
| 
    இத்துணையும் சோலைகளும் அவற்றிற்கு அங்கமான வாவிகளும் கூறினார். 
 | 
  | 
| 
    பசுமை + அவல்: பாசவல். பசுமை - புதுமை. ஆசினியும் வருக்கையும் பலாவின் வகைகள். இச் செய்யுள் உயர்வு நவிற்சியணி. 
 | 
( 39 ) | 
|  69 | 
மன்றனா றிலஞ்சி மேய்ந்து மாமுலை சுரந்தபா |  
|   | 
னின்றதாரை யானில நனைப்பவேகி நீண்மனைக |  
|   | 
கன்றருத்தி மங்கையர் கலம்நிறை பொழிதர |  
|   | 
நின்றமேதி யாற்பொலந்த நீரமாட மாலையே. | 
 
 
 | 
| 
    (இ - ள்.) மன்றல் நாறு இலஞ்சி மேய்ந்து மாமுலை சுரந்த பால் - மணங்கமழும் மடுவின் மலர்களை மேய்தலாற் பெரிய மடிசுரந்த பால் ; நிலம் நனைப்ப நின்ற தாரையால் - நிலத்தை நனைக்குமாறு மாறாது பெய்த தாரையாலே ; ஏகி நீள்மனைக் கன்று அருத்தி - கன்றை நினைத்துப் பெரிய மனைக்குச் சென்று அதனை ஊட்டி; மங்கையர் கலம்நிறை பொழிதர நின்ற மேதியால் - மங்கையர் கொணர்ந்த கலமும் சாலும் நிறையுமாறு பொழிய நின்ற எருமைகளால்; மாடமாலை பொலிந்த நீர - மாட வொழுங்குகள் பொலிந்த தன்மையின. 
 | 
  | 
| 
    (வி - ம்.) இலஞ்சி - மடு : இடவாகு பெயர் , நிறை - சால்: 'பீரிவர்வு பரந்த நீரறு நிறைமுதல்' (பதிற் 15) என்றார் பிறரும். மாலை - ஒழுங்கு. 
 | 
  | 
| 
    அந்நாட்டில் ”கன்றுயிர் ஓய்ந்துகக் கறந்து பாலுண்ணும் கொடுமையில்லை” என்பார், ”கன்றருத்தி மேதி கலம்நிறை பொழிதரும்” என்றார். 
 | 
  | 
  | 
| 
 1. பரிந்து - நழுவச்செய்து. 
 | 
  |