| காந்தருவ தத்தையார் இலம்பகம் |
440 |
|
|
(இ - ள்.) மத்திரிப்பு உடைய நாகம் வாய்வழி கடாத்தது ஆகி உத்தமப் பிடிக்கண் நின்றால் - செற்றமுடைய களிறு மிகுந்து பொழியும் மதமுடையதாகி நல்லிலக்கணப் பிடியினிடம் நின்றால்; களபக்கு உடற்றுதல் ஆமே? - யானைக் கன்றிற்கு அதனைக் கெடுத்தல் இயலுமோ?; பத்தினிப் பாவை நம்பி சீவகன் பாலள் ஆனால் - கற்புறு நங்கை தத்தை நம்பியாகிய சீவகனுக்குரியள், எனின்; அரசிர்காள்! அத்திறம் கருதி ஊக்கல் நுங்கட்கு ஆமோ? - அரசர்களே! அவளைப் பெறுந் திறத்தை நீர் கருதி முயறல் நுமக்குக் கூடுமோ?
|
|
|
(வி - ம்.) அரசராயினும் கலைகளாலும் ஆண்மை முதலியவற்றாலுங் குறைபாடு உடைமையிற் பெறுதல் அரிது என்றான்.
|
|
|
மத்திரிப்பு - சினம். நாகம் - யானை. களபக்கு - யானைக்கன்றிற்கு; களபத்திற்கு எனற்பாலது சாரியை பெறாது உருபு புணர்ந்து இங்ஙனம் நின்றது.
|
( 261 ) |
| 754 |
தூமத்தாற் கெழீஇய கோதை |
| |
தோட்டுணை பிரித்தல் விண்மேற் |
| |
றாமத்தாற் கெழீஇய மார்ப |
| |
னிந்திரன் றனக்கும் ஆகா |
| |
தேமுற்றீ ரின்னும் கேண்மி |
| |
னிரதியைப் புணர்து மென்று |
| |
காமத்தாற் கெழுமி னார்க்குக் |
| |
காமனிற் பிரிக்க லாமே. |
|
|
(இ - ள்.) தூமத்தால் கெழீஇய கோதை தோள்துணை பிரித்தல் - அகிற்புகை கழுமிய கோதையாளின் தோளின் துணையாகிய சீவகனைப் பிரித்தல்; விண்மேல் தாமத்தால் கெழீஇய மார்பன் இந்திரன் தனக்கும் ஆகாது - வானுலகிற் கற்பக மலர் பொருந்திய மார்பன் இந்திரனுக்கும் இயலாது; ஏம் உற்றீர்! இன்னும் கேண்மின்! - மயக்கமுற்றவர்களே! இன்னும் கேளுங்கள்!; இரதியைப் புணர்தும் என்று காமத்தால் கெழுமினார்க்கு - இரதியைக் கூடுவோம் என்று காமத்தினாற் பொருந்தினவர்கட்டு; காமனின் பிரிக்கல் ஆமே - காமனிடமிருந்து அவளைப் பிரித்தல் கூடுமோ?
|
|
|
(வி - ம்.) வானவனாலும் சீவகனைப் பிரித்தல் அரிதென்று கூறிப் பின் இவளைப் பிரித்தலும் அரிது என்றான். இவை ஐந்து செய்யுளும் பேதம்.ஏமுற்றீர் - மயக்கங்கொண்டீர்.
|
( 262 ) |