| காந்தருவ தத்தையார் இலம்பகம் |
450 |
|
| 772 |
மொட்டுலா முலைகள் பாய்ந்த |
| |
வகலத்துச் சரங்கண் மூழ்கப் |
| |
பட்டுலாய்க் கிடக்க லுற்றா |
| |
யென்சொலாய் பாவி யென்றார். |
|
|
(இ - ள்.) மட்டு உலாம் தாரினாய்! - தேன் உலவும் மாலையினாய்!; சிலம்பு செம்பொன் கிண்கிணி மகளிர் - சிலம்பும் பொற்கிண்கிணியும் உடைய மகளிரின்; கோங்கம் மொட்டு உலாம் முலைகள் பாய்ந்த அகலத்துள் - கோங்கரும்பனைய முலைகள் தாக்கிய மார்பிலே; சரங்கள் உலாய் மூழ்கப் பட்டு - அம்புகள் உலாவி மூழ்குவதனாலே இறந்து; நின் வனப்பினோடு இளமை கல்வி கெட்டு - நின் வனப்பும் இளமையும் கல்வியும் அழிந்து; கிடக்கலுற்றாய் பாவி! - கிடக்க நேர்ந்த பாவியே!; என் சொலாய் என்றார் - நீ ஏது சொல்லாய் என்று மன்னர்கள் கூறினர்.
|
|
|
(வி - ம்.) இவை, மன்னர் இவன் அழகில் தத்தை ஈடுபட்டாள் என்பது பற்றி யுண்டான பொறாமை மொழிகள் ஆதல் உணர்க.
|
( 280 ) |
| 773 |
எரிசுடர்ப் பருதி முன்ன |
| |
ரிருளென வுடைந்து நீங்கப் |
| |
பொருபடை மன்னர் நுங்கள் |
| |
புறக்கொடை கண்டு மற்றிம் |
| |
முருகுடைக் குழலி னாடன் |
| |
முகிழ்முலை கலப்ப லன்றே |
| |
லிருசுடர் வழங்கும் வையத் |
| |
தென்பெயர் கெடுக வென்றான். |
|
|
(இ - ள்.) எரி சுடர்ப் பருதி முன்னர் இருள் என- விளங்கும் ஒளியை யுடைய ஞாயிற்றின் முன்னர் இருள் உடைந்து நீங்குமாறு போல; பொரு படை மன்னர் உடைந்து நீங்க - பொருகின்ற படை ஏந்திய மன்னராகிய நீங்கள் என் தோற்றங் கண்டு உடைந்து நீங்குதலினாலே; நுங்கள் புறக்கொடை கண்டு - உங்கள் புறங் கண்டு; மற்று இம் முருகுடைக் குழலினாள் தன் முகிழ்முலை கலப்பல் - பிறகு, இந்த மணங்கமழ் கூந்தலாளின் இளமுலையைத் தழுவுவேன்; அன்றேல் - அல்லவாயின்; இருசுடர் வழங்கும் வையத்து என் பெயர் கெடுக என்றான் - ஞாயிறு திங்கள் உலவும் உலகிலே என் பெயர் நடவாது அழிக என்றான் சீவகன்.
|
|
|
(வி - ம்.) இது வஞ்சினம். முன், இளமை முதலியவற்றை அவ்வரசர்கள் கொன்று கூறலின், அக் கொலை பொருளாகப் பிறந்த வெகுளி யென்னும் மெய்ப்பாடு. இது, 'நகுதக்கனரே' என்னும் (72) புறப்பாட்டினும் கண்டு கொள்க.
|
( 281 ) |