பக்கம் எண் :

                       
காந்தருவ தத்தையார் இலம்பகம் 452 

   (இ - ள்.) குடை உடை வேந்து எனும் குழாம்கொள் நாகமும் - குடைகளையுடைய மன்னர்கள் எனும் கூட்டமாகிய யானைகளும்; கொடி யெனும் பிடி உடைக் குமர வேழமும் - தத்தையாகிய பிடியையுடைய சீவககுமரனாகிய களிறும்; வெடிபடு போர்த்தொழில் காண - தம்மின் பகைத்தலுண்டாகிய போர்த் தொழிலைக் காண்டற்கு; விஞ்சையர் இடியுடை இனமழை நெற்றி ஏறினார் - வித்தியாதரர்கள் இடியுடைய முகில் திரளின் மேல் ஏறினர்.

 

   (வி - ம்.) வெடி - முழக்குமாம்.

 

   நாகமும் - யானைகளும். கொடி : தத்தை. குமரவேழம் : சீவகனாகிய யானை. வெடிபடுதல் - பகைத்தல்; பிளவுபடுதல். விஞ்சையர் - வித்தியாதரர்.

( 284 )
777 கரைபொரு கடலொடு கார்க ணுற்றென
முரைசொடு வரிவளை முழங்கி யார்த்தன
வரைசரு மமர்மலைந் தரணம் வீசினார்
குரைகடற் றானைபோர்க் கோலஞ் செய்தவே.

   (இ - ள்.) கரைபொரு கடலொடு கார்கண் உற்றென - கரையுடன் பொருங் கடலொலியுடன் வான் முழக்கம் சேர்ந்தாற்போல; முரைசொடு வரிவளை முழங்கி ஆர்த்தன - முரசும் சங்கும் முழங்கி ஆரவாரித்தன; அரைசரும் அமர் மலைந்து அரணம் வீசினார் - மன்னரும் போரை மேற்கொண்டு கவசத்தை அணிந்தனர்; குரை கடல் தானை போர்க் கோலம் செய்தவே - ஒலி கடலனைய அவர் படைகளும் போர்க் கோலம் மேற்கொண்டன.

 

   (வி - ம்.) கார் - முகில். முரைசு, அரைசு, என்பன எதுகை நோக்கி அகரம் ஐகாரமாய்த் திரிந்து நின்றன. வரிவளை - வரியையுடைய சங்கு. அரணம் - கவசம். வீசுதல் - ஈண்டு வீக்கினார் என்னும் பொருள்பட நின்றது. வீக்குதல் - கட்டுதல்.

( 285 )
778 தெய்வதம் வணங்குபு செம்பொன் வாயுளிட்
டெய்கணைப் படுமழை சிதறி யெங்கணு
மொய்யமர் மலைந்தனர் முருகு விம்முதார்ச்
செய்கழற் சீவகன் வாழ்க வென்னவே.

   (இ - ள்.) முருகு விம்மு தார்ச் செய்கழல் சீவகன் வாழ்க என்ன - மணம் மிகு மாலையும் கழலும் அணிந்த சீவகன் வாழ்க என்று; தெய்வதம் வணங்குபு - தெய்வத்தை வணங்கி; செம்பொன் வாயுள் இட்டு - பாடுகுறித்துப் பொற் றகட்டை வாயி