பக்கம் எண் :

                   
காந்தருவ தத்தையார் இலம்பகம் 455 

போலக் கொடிய களிற்றின் கொம்புகள் உழுது; அகன்ற மார்பம் கீற்றுப்படடு அழகிதாகக் கிடக்க எனக் கொடுத்து நிற்பார் - பரந்த மார்பு கீற்றுப்பட்டு அழகாகக் கிடக்க என்று (மார்பை யானையினிடம்) கொடுத்து நிற்பார்.

 

   (வி - ம்.) இது முதல் நான்கு செய்யுட்கள் சீவகன் தோழர் செயல் கூறுகின்றன.

( 290 )
783 கழித்துவா ளமலை யாடிக்
  காட்டுவார் கண்கள் செந்தீ
விழித்துமேற் சென்ற வேழம்
  வேலினால் விலக்கி நிற்பார்
தெழித்துத் தோ்க் கயிறு வாளா
  லரிந்திட்டுப் புரவி போக்கிப்
பழிப்பில கொணர்ந்து பூட்டு
  பாகந் யென்று நிற்பார்.

   (இ - ள்.) கழித்து வாள் அமலை ஆடிக் காட்டுவார் - (உறையினின்றும்) கழித்து வாட்கூத்தாடிக் காட்டுவார்; செந்தீ விழித்து மேல் சென்ற வேழம் - நெருப்பெழ விழித்து எதிர் நோக்கி வந்த வேழத்தை; வேலினால் விலக்கி நிற்பார் - வேலால் தடுத்து நிற்பார்; தெழித்துத் தேர்க் கயிறு வாளால் அரிந்திட்டுப் புரவி போக்கி - (பாகனைச்) சீறித் தேர்க் கயிற்றை வாளால் அறுத்துக் குதிரையை ஓட்டிவிட்டு; பாக! பழிப்பில் கொணர்ந்து பூட்டு என்று நிற்பார் - பாகனே! குற்றம் அற்ற புரவிகளைக் கொண்டுவந்து பூட்டுக என்று நிற்பார்.

 

   (வி - ம்.) வாளமலை - போர்க்களத்து மறவர் வாளை விதிர்த்தாடும் ஒருவகைக் கூத்து. இதனை, ”களிற்றொடு பட்ட வேந்தனை அட்டவாளோர் ஆடு ஒள்வா ளமலை” என வரும் தொல்காப்பியத்தானும், வேந்தன் ”வலிகெழுதோள் வாள்வயவர் ஒளிகழலான் உடனாடின்று' எனவரும் புறப்பொருள் வெண்பாமாலையானும்(147) உணர்க.

( 291 )
784 ஐங்கதிக் கலினப் பாய்மாச்
  சிறிதுபோர் களையீ தென்பார்
வெங்கதிர் வேலிற் சுட்டி
  வேந்தெதிர் கொண்டு நிற்பார்
நங்கைகல் யாணம் நன்றே
  நமக்கென நக்கு நிற்பார்
சிங்கமும் புலியும் போன்றார்
  சீவகன் றோழன் மாரே