| காந்தருவ தத்தையார் இலம்பகம் |
456 |
|
|
(இ - ள்.) ஐங்கதிக் கலினப் பாய்மரப் போர் சிறிது - ஐங்கதியையும் கடிவாளத்தையு முடைய புரவிப் போர் சிறிது; ஈது களை என்பார் - இதனை நீங்கு என்பார்; வெங்கதிர் வேலின் வேந்து சுட்டி எதிர்கொண்டு நிற்பார் - ஞாயிறு போன்ற வேலினாலே வேந்தனொருவனைச் சுட்டிக் காட்டி இவன் எனக்கு எதிர் என்று எதிர்த்து நிற்பார்; நங்கை கல்யாணம் நமக்கு நன்றே என்று நக்கு நிற்பார் - தத்தையின் திருமணம் (போரைத் தந்ததால்) நமக்கு நன்மையே செய்தது என்று நகைத்து நிற்பார்; சிங்கமும் புலியும் போன்றார் சீவகன் தோழன்மார் - (இங்ஙனம்) சிங்கமும் புலியும் போல இயங்கினார் சீவகனுடைய தோழர்கள்.
|
|
|
(வி - ம்.) வெங்கதிர் வேலின் வேந்து சுட்டி (அவனை) எதிர் கொண்டு நிற்பார் என மாறுக. நங்கை - தத்தை. நன்றே என்பது நமக்கிப் போரினைத் தந்தமையால் நன்று என்பதுபட நின்றது.
|
|
|
ஐங்கதி: ”விக்கிதம் வற்கிதம் வெல்லும் உபகண்டம் - மத்திமஞ்சாரியோ டைந்து.”
|
( 292 ) |
| 785 |
ஒருங்கவன் பிறந்த ஞான்றே |
| |
பிறந்தவ ருதயத் துச்சி |
| |
யிரும்பினாற் பின்னி யன்ன |
| |
யெறுழ்வலி முழவுத் தோளார் |
| |
விரும்புவார் வேழ வேற்போர் |
| |
நூற்றுவர் நூறு கோடிக் |
| |
கிருந்தனம் வருக வென்பா |
| |
ரின்னண மாயி னாரே. |
|
|
(இ - ள்.) அவன் பிறந்த ஞான்றே ஒருங்கு பிறந்தவர் - சீவகன் பிறந்த அன்றே கூடப் பிறந்தவர்; உதயத்து உச்சி இரும்பினால் பின்னி அன்ன எறுழ்வலி முழவுத் தோளார் - உதய மலையின் முடியை இரும்பாற் கட்டினாற் போன்ற பெருவலி படைத்த முழவனைய தோளினர்; வேழ வேல் போர் விரும்புவார் - யானையை வேலால் எறியும் போரை விரும்புகின்றவர்; நூற்றுவர் நூறு கோடிக்கு இருந்தனம், வருக என்பார் - நூற்றுவர் நூறு கோடி படைக்கு எதிராக இருந்தோம்; வருக என்று எதிர்ப் படைஞரைப் போருக்கு ஏற்பார்; இன்னணம் ஆயினார் - இங்ஙனம் போரிலே யீடுபட்டனர்.
|
|
|
(வி - ம்.) கூடப் பிறந்தவர் எனினும் ஒரு தாய் வயிற்றிற் பிறந்தவரல்லர்; தோழராய்ப் பிறந்தவர். நச்சினார்க்கினியர் 782 முதல் 785 வரை ஒரு தொடராக்கிக் கூறும் முடிபு :
|
|
|
சீவகன் தோழன்மார், அவன் பிறந்த அன்றே கூடப் பிறந்தவர், தோளார், விரும்புவார், வருக என்பார், அவர்கள்தாம் இப் போரில்
|
|