| காந்தருவ தத்தையார் இலம்பகம் |
457 |
|
|
இன்னணமாயினார். அஃது எங்ஙனே யெனின், என்பார் விடாது நிற்பார், கொடுத்து நிற்பார், காட்டுவார், விலக்கி நிற்பார், பூட்டென்று நிற்பார், களையென்பார், எதிர்கொண்டு நிற்பார், நக்கு நிற்பாராய்ச் சிங்கத்தையும் புலியையும் ஒத்தார் என்க.
|
|
|
இவை நான்கு கையிலும் நின்ற படைத் தலைவரல்லாத் தோழர் பொருதபடி கூறின.
|
( 293 ) |
| 786 |
கூட்டுற முறுக்கி விட்ட |
| |
குயமகன் றிகிரி போல |
| |
வாட்டிறற் றேவ தத்தன் |
| |
கலினமா மாலை வெள்வே |
| |
லீட்டம்போழ்ந் தியானை நெற்றி |
| |
யிருங்குளம் பழுத்தி மன்னர் |
| |
சூட்டொடு கண்ணி சூளா |
| |
மணிசிந்தித் திரியு மன்றே. |
|
|
(இ - ள்.) கூட்டு உற முறுக்கி விட்ட குயமகன் திகிரி போல - மண்ணுருண்டையுடன் திரித்துவிட்ட குயவனுடைய சக்கரம்போல; வாள் திறல் தேவதத்தன் கலின மா - வாள் வலி படைத்த தேவதத்தனுடைய புரவி; மாலை வெள்வேல் ஈட்டம போழ்ந்து - மாலை யணிந்த வெள்ளிய வேற்படையின் திரளைப் பிளந்து; யானை நெற்றி இருங் குளம்பு அழுத்தி - யானையின் நெற்றியிலே குளம்புகளை அழுத்தி; மன்னர் சூட்டொடு கண்ணி சூளாமணி சிந்தி - மன்னர் அணிந்த போர்ப்பூ முடிமாலை முடிமணி ஆகியவற்றைச் சிதறி; திரியும் - திரியும்.
|
|
|
(வி - ம்.) இதுமுதல் நான்கு செய்யுட்கள் தோழர் மூவரும் நபுல விபுலரும் பொருதபடி கூறுகின்றார்.
|
|
|
கூட்டு - மண்கூட்டு. 'பசுமட்குரூஉத்திரள்' என்றார் புறத்தினும் (32). கலினமா - குதிரை. சூட்டு - போர்ப்பூ, சூளாமணி - முடியின் மணி.
|
( 294 ) |
| 787 |
பாய்ந்தது கலின மாவோ |
| |
பறவையோ வென்ன வுட்கி |
| |
வேந்தர்தம் வயிறு வேவ |
| |
நபுலமா விபுல ரென்பார் |
| |
காய்ந்துதம் புரவிக் காமர் |
| |
குளம்பினால் களிற்றி னோடை |
| |
தேய்ந்துகச் சோ்த்தி மாலைத் |
| |
திருமுடித் திலகங் கொண்டார். |
|