பக்கம் எண் :

                   
காந்தருவ தத்தையார் இலம்பகம் 458 

   (இ - ள்.) கலினமாவோ பறவையோ பாய்ந்தது என்ன உட்கி - புரவியோ பறவையோ பாய்ந்தது என்று அஞ்சி; வேந்தர் தம் வயிறு வேவ - மன்னருடைய வயிறு எரிய; நபுல விபுலர் என்பார் காய்ந்து - நபுல விபுலர்கள் சினந்து; தம் புரவிக் காமர் குளம்பினால் - தம் குதிரைகளின் அழகிய குளம்பினால்; களிற்றின் ஓடை தேய்ந்து உகச் சேர்த்தி - களிற்றின் முகப்பட்டம் தேய்ந்து விழச் செலுத்தி; மாலைத் திருமுடித் திலகம் கொண்டார் - மாலையையுடைய திருமுடியிலிருந்து சூளாமணியைக் கவர்ந்தனர்.

 

   (வி - ம்.) உட்குதல் - அஞ்சுதல். நபுல விபுலர் - சீவகன் தம்பிமார். காமர் குளம்பு - அழகிய குளம்பு, ஓடை - முகபடாம், திருமுடித் திலகம் என்றது சூளாமணியினை.

( 295 )
788 காயத்தின் குழம்பு தீற்றிக்
  காரிரும் பெறிய மேகந்
தோயுமுள் ளிலவின் கூன்காய்
  சினைதொறு முதிர்வ வேபோன்
மாயங்கொன் மறவர் மாலைப்
  பைந்தலை யுதிர்ந்த செங்கட்
சேயனான் றிருவின் பேரான்
  செழுஞ்சிலைப் பகழி யாலே.

   (இ - ள்.) காயத்தின் குழம்பு தீற்றிக் கார் இரும்பு எறிய - பெருங் காயத்தின் குழம்பைப் பூசிக் கரிய வாளினால் வெட்ட; மேகம் தோயும் முள் இலவின் கூன்காய சினைதொறும் உதிர்வவேபோல் - வான் அளாவிய முள் இலவமரத்தின் வளைந்த காய் கிளைதோறும் சிந்துவன போல; செங்கண் சேய் அனான் திருவின் பேரான் செழுஞ்சிலைப் பகழியால் - அழகிய கண்களையுடைய முருகனைப் போன்றவனான சீதத்தனுடைய சிறந்த வில்லிலிருந்து செல்லும் கணைகளால்; மாலை மறவர் பைந்தலை உதிர்ந்த - மாலையணிந்த மறவரின் பசிய தலைகள் விழுந்தன; மாயம்கொல் - இது மாயமோ?

 

   (வி - ம்.) காயம் - பெருங்காயம். இரும்பு - ஈண்டுக் கோடரி; ஈர்வாளுமாம். செங்கட்சேய் என்றது முருகனை. திருவின் பேரான் : சீதத்தன்.

( 296 )
789 நீனிறப் பௌவ மேய்ந்து
  சூன்முற்றி நீல மேகம்
வானிற விசும்பி னின்ற
  மாரியின் மறைவ லாளன்