| காந்தருவ தத்தையார் இலம்பகம் | 
459  | 
 
  | 
 
 
|  789 | 
போனிறப் புத்தி சேனன் |  
|   | 
  பொன்னணி பகழி சிந்தி |  
|   | 
வேனிற மன்னர் சேனை |  
|   | 
  கூற்றிற்கு லிருந்து செய்தான். | 
 
 
 | 
 
| 
    (இ - ள்.) நீல்நிறப் பௌவம் மேய்ந்து சூல் முற்றி - நீல நிறக் கடலிற் படிந்து நீரைப் பருகிச் சூல் முதிர்தலாலே; நீல மேகம் வால்நிற விசும்பில் நின்ற மாரியின் - கருமுகில் தூயநிற வானிலே மாறாது நின்ற காலமழை போல; மறைவலாளன் பொன் நிறப் புத்திசேனன் - மறைவல்லவனாகிய பொன் வண்ண முற்ற புத்திசேனன்; பொன் அணி பகழி சிந்தி - பொன்னாலான அம்புகளை விடுத்து; வேல்நிற மன்னர் சேனை - வேலேந்திய நிறமுடைய வேந்தரின் படையை; கூற்றிற்கு விருந்து செய்தான் - கூற்றுவனுக்கு விருந்தாக்கினான். 
 | 
  | 
 
| 
    (வி - ம்.) பொன்னிறம், போனிறம் என விகாரம். 'போர்நிறம்' பாடமாயிற் போரொளியாம். 
 | 
  | 
 
| 
    நீலநிறம் - நீனிறம் என்று நின்றது. பௌவம் - கடல். வானிறம் - தூய நிறம். புத்திசேனன் அந்தணன் என்பது தோன்ற மறைவலாளன் என்றார். 
 | 
( 297 ) | 
 
வேறு
 | 
  | 
 
 
|  790 | 
வீரவே லுடம்பெலாஞ் சூழ வெம்புலால் |  
|   | 
சோருஞ்செங் குருதியுண் மைந்தர் தோன்றுவார் |  
|   | 
ஓருமே லொண்மணிச் சூட்டு வைக்கிய |  
|   | 
வாரமே யமைந்ததோ்க் குழிசி யாயினார். | 
 
 
 | 
 
| 
    (இ - ள்.) வெம்புலால் சோரும் செங்குருதியுள் மைந்தர் - கொடிய புலாலுடையதாய்ச் சொரியும் சிவந்த குருதியிடையே நிற்கின்ற வீரர்கள்; வீரவேல் உடம்பு எலாம சூழத் தோன்றுவார் - வீரமிகும் வேல்கள் மெய்ம்முழுதும் சூழ்ந்திருக்கக் காணப்படுவார்; ஒண்மணிச் சூட்டுமேல் வைக்கிய - ஒள்ளிய மணிச்சூட்டை மேலே வைத்தற்கு; ஆரமே அமைந்த தேர்க் குழிசி ஆயினார் - பல ஆரும் தைத்து நிறைந்த தேர்க் குறடு ஆயினார். 
 | 
  | 
 
| 
    (வி - ம்.) குறடு - குடம். ஓரும் : அசை. 
 | 
  | 
 
| 
    வேற்படைகளா லேறுண்ட மறவர்க்கு ஆரக்கால் தைத்த தேர்க் குடத்தை உவமை கூறுதலை. ”நோன் குறட்டன்ன ஊன்சாய் மார்பின்” என வரும் மதுரைக் காஞ்சியினும் (742) காண்க. வைக்கிய : செய்யிய என்னும் வாய்பாட்டு வினையெச்சம். 
 | 
( 298 ) |