| நாமகள் இலம்பகம் |
46 |
|
|
உடைய குன்றின்மேல் திரண்ட மயில்கள் ; தம் சிறகு ஆடும் மஞ்சினுள் விரித்து இருந்தவண்ணம் அன்னர் - தம் சிறகை அவ்விடத்து உலாவும் முகிலினுள்ளே விரித்திருந்த தன்மையை அம் மங்கையர் ஒத்தனர்.
|
|
|
(வி - ம்.) காடி - கஞ்சி, சுட்டு (அக்குழல்) வருவிக்க. 'அன்னது' என்ற பாடத்திற்கு 'மூழ்குதல் வண்ணம் என்னது அன்னது' என்க.
|
|
|
மங்கையர் கூந்தலுக்கும் காடி உண்ட பூந்துகிலினுக்கும் அகிற்புகை ஊட்டுகின்றனர். கூந்தலுக்குக் கலாபம் உவமை
|
( 42 ) |
| 72 |
கண்ணுளார்நுங் காதல ரொழிக்காம மீங்கென |
| |
வுண்ணிலாய வேட்கையா லூடினாரை யாடவர் |
| |
வண்ணமே கலைகளைப் பற்றவற் றுதிர்ந்தன |
| |
எண்ணில்பொன் சுடுநெருப் புக்கமுற்ற மொத்தவே. |
|
|
(இ - ள்.) நும் காதலர் கண்ணுளார் - உம்மாற் காதலிக்கப் பட்ட மகளிர் உம் கண்களின் உள்ளனர் ; ஈங்குக் காமம் ஒழிக என - ஈங்குக் காமத்தை ஒழிக என்று கூறி ; உள்நிலாய வேட்கையால் ஊடினாரை ஆடவர் - உள்ளே நிலவுகின்ற விருப்பத்தாலே ஊடிப் போகின்றவரை அவர்களின் கணவர்கள் ; வண்ணம் மேகலைகளைப் பறற அற்று உதிர்ந்தன- அழகிய மேகலைகளைப் பிடிக்க அவை அற்றுச் சிந்தினவை (கிடந்த இடம்;) எண்இல் பொன் சுடுநெருப்பு உக்க முற்றம் ஒத்த - மாற்று அற்ற பொன்னைச் சுடும் நெருப்புச் சிந்தின முற்றங்களைப் போன்றன.
|
|
|
(வி - ம்.) இமையாது நோக்கலின், இங்ஙனம் ஊடினார்.1. ”ஈங்கு' தன்மையை உணர்த்துதல், 'செலவினும் வரவினும்' (தொல். கிளவி . 28) சூத்திரத்திற் கூறினாம். பொன்னுக்கும் (நீல) மணிக்கும் தழலும் கரியும் உவமை.
|
|
|
இச்செய்யுள் வள்ளுவர் ஊடல் நுணுக்கத்தே கூறுவனபோன்ற தொரு ஊடல் நுணுக்கமாதலுணர்க. மகளிர் தம்மை இமையாது நோக்கும் ஆடவர் கண்ணிலே தம்முருவந் தோன்றக் கண்டு ”நுங்காதலர் நுங்கண்ணுள்ளே உள்ளனர்” என்று ஊடினர் என்பது கருத்து.
|
( 43 ) |
| 73 |
கோட்டிளந் தகர்களுங் கொய்ம்மலர தோன்றிபோற் |
| |
சூட்டுடைய சேவலுந் தோணிக்கோழி யாதியா |
| |
வேட்டவற்றி னூறுளார் வெருளிமாந்தர் போர்கொளீஇக் |
| |
காட்டியார்க்கும் கௌவையுங் கடியுங்கௌவை கௌவையே. |
|
|
(இ - ள்.) வெருளி மாந்தர்- செல்வச் செருக்கினையுடைய மாந்தர்கள் ; அவற்றின் ஊறு உளார் - அவற்றினுடைய புண்
|
|
|
|
1. 'யாவை யீங்களிப்பன தேவர்கோன்' (மணி. 14-48) என்னுமிடத்தும் 'ஈங்கு' தன்மையிடத்தை உணர்த்தியது.
|
|