பக்கம் எண் :

                           
காந்தருவ தத்தையார் இலம்பகம் 460 

   (இ - ள்.) சீவகன் தம்பியை நோக்கி - சீவகன் நந்தட்டனைப் பார்த்து; இம்பர் நம் இடர்கெட இரண்டும் வல்லையாய் - இவ்விடத்தில் நமது துன்பம் கெட வீரமந்திரம் இரண்டையும் நீ கற்று; சாமரை வெம்பரி மான் செவி - சாமரையையும் விரை வினையுமுடைய புரவியின் செவிகளிலே; நீ மொழிக என நயந்து கூறினான் - நீ உரைப்பாயாக என்று விரும்பிக் கூறினான்.

 

   (வி - ம்.) இரண்டும் - பறப்பிக்கு மதுவும் வேண்டுமிடத்தே நிறுத்துவிப்பதுவும். மந்திரம ்: குதிரைகளை விரைவிற் செலுத்தும் காண்ட மந்திரம்.

 

   மந்திரம் இரண்டையும் அவனுக்கு ஓதி இவற்றைக் கற்று வல்லையாய் நீ மொழிக என்றான் என்க. தம்பி : நந்தட்டன்.

( 300 )

வேறு

 
793 மந்திரங் கேட்டு நான்கும்
  வானெட்டிப் புகுவ வேபோ
லந்தரத் திவர்ந்த வாழிக்
  கானிலம் விட்ட மாலைச்
791 பொன்னனாள் புணர்முலைப் போகம் வேண்டிய
மன்னரோ டிளையவர் மறலி வாளம
ரின்னண மித்தலை மயங்க வத்தலைக்
கொன்னவில் வேலினா னிலைமை கூறுவாம்.

   (இ - ள்.) பொன் அனாள் புணர்முலைப் போகம் வேண்டிய மன்னரோடு - திருவனைய தத்தையின் முலைகளின் இன்பம் விரும்பிய அரசரோடு; இளையவர் மறலி - தோழர்கள் மாறுபடுதலாலே; வாள் அமர் இத்தலை இன்னணம் மயங்க - வாட்போர் இங்கே இவ்வாறு மயங்குற; அத்தலைக் கொல்நவில் வேலினான் நிலைமை கூறுவாம் - ஆண்டு நின்ற, கொலையிற் பழகிய வேலினானாகிய சீவகன் நிலையை விளம்புவோம்.

 

   (வி - ம்.) பொன் - திருமகள். இளையவர் என்றது சீவகன் தோழரை. மறலி - மறல. கொல்நவில் வேலினான் - கொலைத்தொழிலிற் பயின்ற வேலை ஏந்திய சீவகன்.

( 299 )
792 தம்பியைச் சீவக னோக்கிச் சாமரை
வெம்பரி மான்செவி வீர மந்திர
மிம்பர்நம் மிடர்கெட விரண்டும் வல்லையாய்
நம்பிநீ மொழிகென நயந்து கூறினான்.