காந்தருவ தத்தையார் இலம்பகம் |
461 |
|
793 |
சுந்தரச் சுண்ண மேனி |
|
மகளிர்தங் கண்ணுள் ளிட்ட |
|
மைந்தரு மிரும்பு மொவ்வா |
|
வான்புலங் காவல் கொண்டார். |
|
(இ - ள்.) மந்திரம் கேட்டு - அம் மந்திரத்தை நந்தட்டன் கூறக் கேட்டு; வான் எட்டிப் புகுவவேபோல் அந்தரத்து இவர்ந்த - வானிலே தாவிச் செல்வனபோல அந்தரத்தே பாய்ந்தன; ஆழிக் கால்நிலம் விட்ட - வட்டமான உருள் நிலத்தை விட்டன; மாலைச் சுந்தரச் சுண்ண மேனி மகளிர் தம் கண்ணுள் இட்ட மைந்தரும் - மாலை அணிந்த. அழகிய மணப்பொடியுடைய மெய்யினரான மகளிர்தங் கண்களில் (அழகினால்)வைத்துக்கொண்டிருக்கும் சீவகனும் நந்தட்டனும்; வான்புலம் இரும்பும் ஒவ்வாக் காவல் கொண்டார் - உண்மை அறிவை இரும்பும் ஒவ்வாத கவசமாகக் கொண்டனர்.
|
|
(வி - ம்.) வான்புலம் - உண்மை அறிவு. அதுவே எல்லா வெற்றியும் தருவதென நினைத்து அதனைக் காவலாகக் கொண்டனர்.
|
|
நான்கும்: ஆகுபெயர். ஆழிக்கால் - வட்டமான உருள். உண்மையறிவே எல்லா வெற்றியுந் தருவதாதல் பற்றி வான்புலம் காவல் கொண்டார். இது,
|
|
|
”வேலன்று வென்றி தருவது மன்னவன் |
|
|
கோலதூஉங் கோடா தெனின்” (குறள். 546) |
|
என்னும் அருமைத் திருக்குறளை நினைப்பிக்கின்றது. மேலும்,
|
|
|
”அறிவற்றங் காக்கும் கருவி செறுவார்க்கும் |
|
|
உள்ளழிக்க லாகா அரண்” (குறள்.421) |
|
என்னும் திருக்குறளையும் நினைக.
|
( 301 ) |
794 |
வடிகயி றாய்ந்து முட்கோல் |
|
வலக்கையாற் றாங்கி வென்றி |
|
முடிகெனப் புரவி முள்ளா |
|
லுறுத்தினான் மொழித றேற்றேன் |
|
கடுகிய வண்ண மாவின் |
|
றாரொலி காமர் பொற்றோ் |
|
படையது செவியுங் கண்ணும் |
|
பற்றிநின் றிட்ட வன்றே. |
|
(இ - ள்.) வடி கயிறு ஆய்ந்து - (குதிரையைத் தொழிலிற் பயிற்றும்) வாய்க் கயிற்றைத் தெரிந்து; முள்கோல் வலக்கையால்
|
|