காந்தருவ தத்தையார் இலம்பகம் |
463 |
|
796 |
அகில்கொண்ட கொள்ளி வட்ட |
|
மாருயிர் மேயு நேமி |
|
முகில்கொண்ட மின்னுத் தோற்ப |
|
முறுகிய விசையிற் றாகி |
|
மிகல்கொண்ட விகலைத் தானே |
|
விழுங்கிய சிறகர்த் தோற்றிப் |
|
பகல்கொண்டு பறக்குந் தேராற் |
|
காளைதன் பைம்பொற் றேரே. |
|
(இ - ள்.) அகில் கொண்ட கொள்ளி வட்டம் - அகில் தன்னிடத்தே கொண்ட கொள்ளி வட்டமும்; ஆர் உயிர் மேயும் நேமி - நிறைந்த உயிர்களை அரியும் கால நேமியும்; முகில் கொண்ட மின் - முகிலிடம் உள்ள மின்னும்; தோற்ப - தோற்குமாறு; முறுகிய விசையிற்று ஆகி - கடுகிய விசையுடையதாகி; மிகல் கொண்ட இகலைத் தானே விழுங்கிய - றபாடு கொண்ட ; போரைத் தானே விழுங்குதற்கு; பகல் கொண்டு - ஞாயிற்றைக் கொண்டு; பறக்கும் தேர் காளை தன் பைம்பொன் தேர் - பறக்குந்தேராகும் சீவகனுடைய புதிய பொற்றேர்.
|
|
(வி - ம்.) நெய்யால் ஒளிமிகுதலின் 'அகில் கொண்ட கொள்ளி' கூறினார். மின் வீதிக்கும் ஒழிந்த இரண்டும் வட்டத்திற்கும் உவமை.
|
( 304 ) |
797 |
காலற்ற வயிர மாலை வெண்குடை கவிழ்ந்த பிச்ச |
|
மேலற்ற கவசம் வீழ்ந்த சாமரை யற்ற வின்ஞாண் |
|
மாலுற்ற மன்னர் தங்கண் மனங்கையற் றொழிந்த வள்ளல் |
|
கோலொற்றக் குனிந்த வாறே சிலைகுனிந் தொழிந்த தன்றே. |
|
(இ - ள்.) வள்ளல் கோல் ஒற்றக் குனிந்த ஆறே சிலை குனிந்து ஒழிந்தது - சீவகன் அம்பு தொடுத்தற்கு ஒருமுறை வளைந்தபடியே முழுக்க வளைந்தே நின்றது; (அப்பொழுது) வயிரமாலை வெண்குடை கால் அற் - வயிரமாலை அணிந்த வெண்குடைகள் காம்பற்றன; பிச்சம் கவிழ்ந்த - பிச்சங்கள் கவிழ்ந்தன; மேல் கவசம் அற் - மேலணிந்த கவசங்கள் அற்றன; சாமரை வீழ்ந்த - சாமரைகள் வீழ்ந்தன; வில் நாண் அற்ற - வில்லின் நாண்கள் அறுந்தன; மால் உற்ற மன்னர் தங்கள் மனம் கையற்று ஒழிந்த - மயங்கிய மன்னரின் மனம் செயலற்றுக் குறைந்தன.
|
|
(வி - ம்.) வள்ளல் என்றார் கடுகக் கொல்லாமல் அவரை அச்சுறுத்தலின்.
|
|