| காந்தருவ தத்தையார் இலம்பகம் |
464 |
|
|
குனிந்தவாறே சிலை குனிந்ததொழிந்தது என்றது அதன் கடுப்பால் அதன் நிமிர்ச்சியும் வளைதலும் காணப்படவில்லை என்றவாறு.
|
( 305 ) |
| 798 |
நுங்களை வீணை வென்ற |
| |
நூபுர வடியி னாடன் |
| |
வெங்களித் தடங்கண் கண்டீர் |
| |
விருந்தெதிர் கொண்மி னென்னா |
| |
வங்களி யரசர்க் கெல்லா |
| |
மோரொன்று மிரண்டு மாகச் |
| |
செங்களிப் பகழி யொப்பித் |
| |
துள்ளவா றூட்டி னானே. |
|
|
(இ - ள்.) நுங்களை வீணை வென்ற நூபுர அடியினாள் தன் வெம் களித் தடம் கண் கண்டீர் - (இவை கணைகள் அல்ல) உங்களை வீணையிலே வென்ற சிலம்பு ஒலிக்கும் அடியினாளின் வெவ்விய பெரிய கண்களென் றறியுங்கள்; விருந்து எதிர் கொண்மின் என்னா - (இவற்றை) விருந்தாக வந்து ஏற்றுக் கொள்வீர்களாக என்றுரைத்து; அம் களி அரசர்க்கு எல்லாம் - செருக்கினையுடைய வேந்தர்கட்கு எல்லாம்; ஓர் ஒன்றும் இரண்டும ஆக - ஒன்றும் இரண்டுமாக; செம்களிப் பகழி ஒப்பித்து - செவ்விய களிப்புறுங் கணைகளை விடுத்து; உள்ள ஆறு ஊட்டினானே - அவர்களுடைய தகுதிக்கேற்றவாறு ஊட்டினான்.
|
|
|
(வி - ம்.) 'விருந்து' என்பதற் கேற்ப 'ஊட்டினான்' என்றார். இதனால், மணங் குறைந்தும் போகாது நின்றவர்க்கு அவள் கண்ணைப் பெறுமாறு இங்ஙன மல்லதில்லை யென்று கூறி, அவரை நோவித்தபடி கூறினார்.
|
( 306 ) |
| 799 |
நன்மன வேந்தர் தங்க |
| |
ணகைமணி மார்ப நக்கிப் |
| |
புன்மன வேந்தர் தங்கள் |
| |
பொன்னணி கவசங் கீறி |
| |
யின்னுயிர் கவர்ந்து தீமை |
| |
யினிக்கொள்ளு முடம்பி னுலுந் |
| |
துன்னன்மி னென்ப வேபோற் |
| |
சுடுசரம் பரந்த வன்றே. |
|
|
(இ - ள்.) நல்மன வேந்தர் தங்கள் நகைமணி மார்பம் நக்கி - நல்ல மனமுடைய மன்னரின் ஒளிவிடும் மணிமார்பைத் தீண்டி வருத்தியும்; இனிக்கொள்ளும் உடம்பினானும் தீமை
|
|