பக்கம் எண் :

                   
காந்தருவ தத்தையார் இலம்பகம் 465 

துன்னன்மின் என்பவே போல் - இனி நீங்கள் எடுக்கும் உடம்பினும் பிறர்மனை நயக்கும் தீமையை நெருங்காதீர் என்பன போல; புன்மன வேந்தர் தங்கள் பொன் அணி கவசம் கீறி - இழிமனமுடைய மன்னரின் பொற்கவசத்தைப் பிளந்து; இன் உயிர் கவர்ந்து சுடுசரம் பரந்த - இனிய உயிரைக் கைக் கொண்டு சுடுகணைகள் பரவின.

 

   (வி - ம்.) நன்மன வேந்தர் ஒற்றுமைக்காகப் போருக்கு வந்திருப்பர். அவர்கள் சிறிது நொந்ததும் உணர்ந்து விலகினர். மற்றையரோ உயிரை யிழந்தனர். நச்சினார்க்கினியரும், 'நன்மன வேந்தர் தம் நகையாகிய பிறர்மனை நயத்தலை இனிக் கொள்ளுமுடம்பினும் துன்னன்மின் என்பன போலச் சுடுசரங்கள் இப் புன்மன வேந்தர்களுடைய கவசத்தைக் கீறி மணிமார்பைத் தீண்டி இன்னுயிரைக் கவர்ந்து பரந்தன' என்று கொண்டு கூட்டிப் பொருள் கூறினாரெனினும், 'இதனால், நொந்தும் போகதவர்களிலே சில ருயிரைப் போக்கினமை கூறினார்' என்பது நோக்கத்தக்கது. முற் செய்யுளில், 'உள்ளவா றூட்டின' தன்மை இங்கு விளக்கப்பட்டது.

( 307 )
800 மீனெறி தூண்டில் போன்று வெஞ்சிலை நாண்க ளற்ற
தேனெறி குன்ற மொத்த திண்கச்சை துணிந்த வேழ
மானெறி காட்டுந் திண்டோ் கயிறற்று மறிய வேந்த
ரூனெறி யாழி யேந்தி யொய்யென வுலம்பி யார்த்தார்.

   (இ - ள்.) மீன் எறி தூண்டில் போன்று வெஞ்சிலை நாண்கள் அற்ற - மீன் பிடிக்குந் தூண்டில்கள்போல அரசர்களின் கொடிய விற்களின் நாண்கள் அறுந்தன; திண் கச்சை துணிந்த வேழம் தேன் எறி குன்றம் ஒத்த - அவர்கள் ஏறிய, திண்ணிய கச்சை அறுபட்ட களிறுகள் வண்டுகள் மூசும் குன்றங்கள் போன்றன; திண்தேர் மான் நெறி காட்டும் கயிறு அற்று மறிய - திண்ணிய தேர்களிற் குதிரைகட்கு வழிகாட்டும் கயிறுகள் அற்று மறிபடிலால்; வேந்தர் ஊன் எறி ஆழி ஏந்தி ஒய்யென உலம்பி ஆர்த்தார் - மன்னர்கள் மெய்யைப் பிளக்குஞ் சக்கரம் எடுத்துக்கொண்டு விரைய முழங்கி ஆர்த்தனர்.

 

   (வி - ம்.) ஊன் : ஆகுபெயர். இதனால் படாது நின்றவரை அஞ்சுவித்தமையும், அவர் அஞ்சாமற் போர்குறித் தெழுந்தமையும் கூறினார்.

( 308 )
801 ஆர்ப்பெதிர் மாரி பெய்யு
  மணிநெடுங் குன்றம் போலப்
போர்க்கெதிர்ந் தவரு மார்த்தா
  ரார்த்தலும் பூண்ட வல்வில்