பக்கம் எண் :

                     
காந்தருவ தத்தையார் இலம்பகம் 466 

801 கார்க்கெதிர் மேகம் போலக்
  கணைமழை கான்ற திப்பா
லீர்த்தது குருதி வெள்ள
  மிறைச்சிக்குன் றாக்கி னானே.
le>

   (இ - ள்.) மாரி பெய்யும் அணி நெடுங் குன்றம் எதிர் ஆர்ப்புப் போல - மழை பெய்யும் அழகிய பெருங்குன்று எதிரொலி செய்தல் போல; அவரும் போர்க்க எதிர்ந்து ஆர்த்தார் - அரசர் ஆரவாரத்திற்கு எதிரே சீவகன் வீரரும் எதி ராரவாரம் புரிந்தனர்; ஆர்த்தலும் - அங்ஙனம் இருபக்கமும் ஆரவாரித்தவுடன்; பூண்ட வல்வில் கார்க்கு எதிர்மேகம் போலக் கணைமழை கான்றது - சீவகனது கொலைத்தொழிலை ஏற்ற வலிய வில் கார் காலத்திலே எதிர்ந்த முகில்போல அம்பு மாரி பெய்தது; குருதி வெள்ளம் இப்பால் ஈர்த்தது - (அதனாற் பிறந்த) குருதி வெள்ளம் முன்பு அற்று வீழ்ந்தவற்றைக் களத்திற்குப் புறம்பே இழுத்தது; இறைச்சிக் குன்று ஆக்கினான் - முடிவில் அவரை ஊன்மலையாக்கினான்.

 
801 கார்க்கெதிர் மேகம் போலக்
  கணைமழை கான்ற திப்பா
லீர்த்தது குருதி வெள்ள
  மிறைச்சிக்குன் றாக்கி னானே.
802 மன்னர்கள் வெகுண்டு விட்ட
  மறப்படை யழுவ மாரி
கொன்னுனை யெஃகி னீக்கிக்
  குனிந்துவிற் பகழி கான்ற
மின்னவி ரிலங்கு மொள்வாள்
  விழித்துயிர் விழுங்க வின்ன
தன்மையாற் றானை நீந்தித்
  தான்விளை யாடு கின்றான்.

   (இ - ள்.) மன்னர்கள் வெகுண்டு விட்ட மறப்படை அழுவ மாரி - வேந்தர்கள் சினந்து விடுத்த போர்ப்படையாகிய பெருமழையை; கொல் நுனை எஃகின் நீக்கி - கொல்லும் முனையுடைய வேலால் நீக்கியும்; வில்குனிந்து கான்ற பகழி - வில் வளைந்து உமிழ்ந்த அம்புகளும்; மின் அவிர் இலங்கும் ஒள்வாள் - மின்னென ஒளிவிட்டு விளங்கும் சிறந்த வாளும்; விழித்து உயிர் வாங்க - வேந்தரை நோக்கி உயிரைக் கொண்டும்; இன்ன தன்மையால் தானை நீந்தி - இதுபோன்ற தன்மைகளினாற் படைக்கடைலை நீந்தி; தான் விளையாடுகின்றான் - சீவகன் விளையாடத் தொடங்கினான்.

 

   (வி - ம்.) ஏனையார் அஞ்சும் இப் பெரும்போர் சீவக மன்னர்க்கு விளையாட்டுப் போன்று எளிதாகவிருந்தது.

( 310 )