பக்கம் எண் :

                                 
காந்தருவ தத்தையார் இலம்பகம் 467 

803 வேழவெண் கோட்டு மெல்கோ
  றின்றுகூன் குருதி வாளா
லாழநா வழித்து நெய்த்தோர்
  கொப்புளித் தழிந்த மாவின்
சூழ்குடர்க் கண்ணி சூடி
  நிணத்துகி லுடுத்து வெள்ளென்
பூழ்பெற வணிந்து சூற்பே
  யாடக்கண் டுவந்து நக்கான்.

   (இ - ள்.) வேழ வெண் கோட்டு மெல்கோல் தின்று - களிறுகளின் வெண் கொம்பாகிய மெல்கோலைத் தின்று; கூன் குருதி வாளால் நா ஆழ வழித்து - வளைந்த குருதி வாளினால் நாவை அழுத்தி வழித்து; நெய்த்தோர் கொப்புளித்து - குருதியினால் வாய் கொப்புளித்து; அழிந்த மாவின் சூழ்குடர்க் கண்ணி சூடி - இறந்த குதிரைகளின் சூழ்ந்த குடர்களாகிய கண்ணியை அணிந்து; நிணத்துகில் உடுத்து - ஊன் ஆடை உடுத்து; ஊழ்பெற வெள் என்பு அணிந்து - முறையாக வெண்மையான என்புகளை மாலையாகத் தரித்து; சூல் பேய் ஆடக்கண்டு - சூல்கொண்ட பேய் ஆடுவதைப் பார்த்து; உவந்து நக்கான் - மகிழ்ந்து நகைத்தான் சீவகன்.

 

   (வி - ம்.) மெல் கோல் : வினைத்தொகை.

 

   இச் செய்யுளும் அடுத்து வருஞ் செய்யுளும் மறக்கள வேள்வி என்னும் வாகைத் திணைத் துறையின் பாற்படும். அஃதாவது,

 
  ”அடுதிறல் அணங்கார விடுதிறலான் களம் வேட்டன்று.”  

எனவும்,

 
  ”பிடித்தாடி அன்ன பிறழ்பற்பேய் ஆரக்  
  கொடித்தானை மன்னன் கொடுத்தான் முடித்தலைத்  
  தோளோடு வீழ்ந்த தொடிக்கை துடுப்பாக  
  மூளையஞ் சோற்றை முகந்து” (புறப். வெண். 760)  

   எனவும் வரும் புறப்பொருள் வெண்பாமாலையானும் உணர்க.

( 311 )
804 வெளிற்றுடற் குருதி வெள்ள நிலையிது வென்ப வேபோற்
களிற்றுகிர்ப் பிறழ்பற் பேய்கள் கைகளை யுச்சிக் கூப்பி
யளித்தவை பாடி யாடக் குறுநரி நக்கு வேழம்
விளித்தன கழுகும் பாறும் விலாவிற்றுக் கிடந்த வன்றே.

   (இ - ள்.) வெளிற்று உடல் குருதி வெள்ளம் நிலை இது என்ப போல் - குருதி நீங்கிய பிணத்தையுடைய குருதிப்