பக்கம் எண் :

                   
காந்தருவ தத்தையார் இலம்பகம் 469 

806 கடாந்திறந் திட்டு வானிற்
  களகள முழங்கும் வேழம்
படாந்திறந் தூழித் தீயிற்
  பதுமுகன் காட்டி யிட்டான்
தடாம்பிறை மருப்புத் திண்கை
  யபரகாத் திரங்க டம்மாற்
கொடாம்பிற குமரிப் போருட்
  பிறர்க்கெனக் கொன்ற தன்றே.

   (இ - ள்.) வானின் கடாம் திறந்திட்டுக் களகள முழங்கும் வேழம் - முகில்போல மதத்தைப் பெருக்கிக் களகள என்று முழங்குகின்ற வேழத்தை; படாம் திறந்து ஊழித் தீயின் பதுமுகன் காட்டியிட்டான் - முகப்பட்டத்தை நீக்கி ஊழித் தீப்போலக் கொணர்ந்து பதுமுகன் போர்க்களத்தைக் காட்டினான்; தடாம் பிறை மருப்பு திண்கை அபர காத்திரங்கள் தம்மால் - வளைந்த பிறை போன்ற மருப்பும் திண்ணிய கையம் கால்களும் ஆகியவற்றால்; குமரிப் போருள் பிறர்க்குக் கொடாம் எனக் கொன்றது - தத்தை காரணத்தாற் பிறந்த போரில் பிறர்க்குக் கொலைத் தொழிலைக் கொடோம் என்று கொன்றது.

 

   (வி - ம்.) வரகாத்திரம் என்பதனைத் தலை யென்றும் அவரகாத்திரம் என்பதனைக் காலென்றும் வடநூலார் கூறுவராதலின், தேவர் அதனைச் சிதைத்து, அபரகாத்திரம் என்றார்; ஐராவதம் ஐராபதம் என்றாற்போல; எனவே, அவரகாத்திர மென்றது கால்களை; இனி, பின்கால் முன்கால் என்பாருமுளர். பிற : அசைச்சொல். குமரிப்போர் - கன்னிப் போருமாம்.

 

   இக்கவி முதலாகத் தத்தையைக் காத்து நின்ற பதுமுகன் பகைவர் தலைசாய்ந்தமை கண்டு பொருதல் கூறுகிறார்.

( 314 )
807 மருப்பினால் வேழம் வீழா
  மன்னரை வாலிற் சீறா
முருக்கித்தோ் தடக்கை தன்னான்
  முழங்கிப்பாய் மாக்கள் காலி
னெரித்திடாக் கண்ணுட் டீயாற்
  சுட்டுநீ றாக்கி நெய்த்தோ
ரொருக்கிப்பேய் பாடி யாட
  வுறுசிலை யுடன்று கொண்டான்.

   (இ - ள்.) மருப்பினால் வேழம் வீழா - (பதுமுகன் வேழம்) கொம்பினாலே யானைகளை வீழ்ததி; வாலின் மன்னரைச் சீறா -