| நாமகள் இலம்பகம் |
47 |
|
|
ணைக் கருதாதவராய் ; வேட்டு - மேலும் போரை விரும்பி ; கோட்டு இளந் தகர்களும் -கொம்புகளையுடைய இளமையான ஆட்டுக் கடாக்களையும் ; கொய்தோன்றி மலரபோல் - கொய்யத் தகுந்த தோன்றி மலர்களைப்போன்ற ; சூட்டு உடைய - சூட்டினையுடைய ; தோணியில் வந்த கோழி முதலாக கோழிகளையும் ; சேவலும் - காடை முதலான சேவல்களையும்; காட்டிப் போர் கொளீஇ - காட்டிப் போரிற் பொருத்தி ; ஆர்க்கும் கௌவையும் - ஆரவாரிக்கும் ஒலியும் ; கடியும் கௌவை கௌவையே - விலக்கும் ஒலியுமே ஒலியாக (அங்குள்ளன.)
|
|
|
(வி - ம்.) இங்ஙனமாகிய ஆரவாரமேயன்றித் துன்ப முதலியவற்றால் உண்டாகும் ஆரவாரம் இல்லை என்பது குறிப்பு. கடியும் கௌவையும் என்னல் வேண்டிய உம்மை செய்யுள் விகாரத்தால் தொக்கது.
|
( 44 ) |
| 74 |
இறுநுசுப்பி னந்நலா ரேந்துவள்ளத் தேந்திய |
| |
நறவங்கொப் புளித்தலி னாகுபுன்னை பூத்தன |
| |
சிறகர்வண்டு செவ்வழி பாடமாடத் தூடெலா |
| |
மிறைகொள்வானின் மீனென அரம்பைமுலையி னிருந்தவே. |
|
|
(இ - ள்.) இறும் நுசுப்பின் அம்நலார் ஏந்து வள்ளத்து ஏந்திய நறவம் கொப்புளித்தலின் - இட்டிடையுடைய அழகிய மகளிர் மணிக் கிண்ணத்திலே எடுத்த மதுவைக் கொப்புளித்தலால் ; நாகு புன்னை சிறகர் வண்டு செவ்வழி பாட மாடத்து ஊடெலாம் இறைகொள் வானின் மீன்எனப் பூத்தன - இளைய புன்னை மரங்கள் சிறகையுடைய வண்டுகள் செவ்வழி பாடுமாறு மாடங்களில் எல்லாம் தங்கிய விண்மீன்போல மலர்ந்தன ; (நறவம் கொப்புளித்தலின்) அரம்பை முலையின் இருந்த - அவர்கள் மதுவைக் கொப்புளித்ததால் வாழை முகை முலைபோல இருந்தன.
|
|
|
(வி - ம்.) 'நாகு புன்னை' வேற்றுமைத் தொகையாய் , 'ஒற்றிடையின் மிகாமொழியும் ' (தொல். குற்றியலுகரப். 7) என்னுஞ் சூத்திரத்தான், ஒற்று அடாது நின்றது, 'சொல்லிய மரபின் (தொல். மரபு-26) என்னுஞ் சூத்திரத்தில், 'சொல்லுங்காலை ' என்றதனால், 'நாகு' பெண்மையேயன்றி, இளமையும் உணர்த்திற்று. 'நாகுமுதிர் நுணவம்' (சிறுபாண். 51) என்றார் பிறரும். இறை - தங்குதல்.
|
|
|
மகளிரின் உதைத்தல் முதலிய செயல்களால் மலரும் மரங்களைச் சேர்ந்தவை புன்னையும் வாழையும் எனவே, அவர் கொப்புளித்தலால் அவை மலர்ந்தன என்றவாறு.
|
( 45 ) |
| 75 |
விலக்கில்சாலை யாவர்க்கும் வெப்பின்முப் பழச்சுனைத் |
| |
தலைத்தணீர் மலரணிந்து சந்தனஞ்செய் பந்தரும் |
| |
கொலைத்தலைய வேற்கணார் கூத்துமன்றி யைம்பொறி |
| |
நிலத்தலைய துப்பெலா நிறைதுளும்பு மூர்களே. |
|