பக்கம் எண் :

                       
காந்தருவ தத்தையார் இலம்பகம் 470 

வாலால் வேந்தரைச் சீறி; தடக்கை தன்னால் தேர் முருக்கி - துதிக்கையினால் தேரை முறித்து; முழங்கிக் காலின் பாய் மாக்கள் நெரித்திடா - பிளிறிச் சென்று கால்களாற் புரவிகளை நெரித்து; கண்ணுள் தீயால் சுட்டு நெய்த்தேர் நீறாக்கி - கண்ணில் எழும் நெருப்பினாற் சுட்டுக் குருதியைத் துகளாக்கிக்கொல்ல; ஒருக்கி - (பதுமுகனும்) கொல்லக் கருதி; பேய் பாடி ஆட - பேய் பாடி ஆடும்படி; உறுசிலை உடன்று கொண்டான் - தக்க தொரு வில்லைச் சினந்து ஏந்தினான்.

 

   (வி - ம்.) ஒருக்கி - ஒரு சேர ஆக்கி; எனவே, தானும் கொலை கருதி.

( 315 )

வேறு

 
808 கொண்டான் பகழி தொடுத்தான் சிலை கால்கு னிந்த
தொண்டோ் மிசையு முருவக்களிற் றுச்சி மேலும்
வண்டார்ப் புரவி நிறத்தும்மற மன்னர் மேலுங்
கண்டான் சொரிந்தான் கணைமாரி கலந்த தன்றே.

   (இ - ள்.) கொண்டான் பகழி தொடுத்தான் - வில்லைக் கையிலேந்தியவன் கணைகளைத் தொடுத்தான்; சிலை கால் குனிந்தது - வில்லின் கால் வளைந்தே யிருந்தது; ஒண்தேர் மிசையும் உருவக் களி உச்சி மேலும் - தேரின் மேலும் அழகிய களிற்றின் நெற்றியிலும்; வண்தார்ப் புரவி நிறத்தும் - வளமிகு கிண்கிணி மாலை அணிந்த குதிரைகளின் மார்பிலும்; மற மன்னர் மேலும - வீரமுறு வேந்தர் மீதும்; கண்டான் தொடுத்தான் - அழுந்துமாறு நோக்கிச் சொரிந்தான்; கணை மாரி கலந்தது - சீவகன் வேறொருபுறம் நின்று பெய்த அம்பு மழையுடன் பதுமுகன் சொரிந்த கணைமாரியும் கலந்தது.

 

   (வி - ம்.) 'கண்டான்' என்பதைச் சீவகன் கணையுடன் தன் கணை கலப்பதைப் பதுமுகன் கண்டான் என மாற்றுவர் நச்சினார்க்னியர். கணைமாரி, 'மன்னர்கள் வெகுண்டு' என்னுஞ் செய்யுளிற் கூறிய கணைமாரி.

( 316 )
809 பைம்பொற் புளகப் பருமக்களி யானை யீட்டஞ்
செம்பொ னெடுந்தோ்த் தொகைமாக் கடற்சேனை வெள்ள
நம்பன் சிலைவாய் நடக்குங்கணை மிச்சி லல்லா
லம்பொன் மணிப்பூ ணரசும் மிலையென்று நக்கான்.

   (இ - ள்.) பைம் பொன் புளகப் பருமக் களியானை ஈட்டம் - பசும் பொன்னால் ஆகிய, கண்ணாடியைக் கொண்ட பருமத்தையுடைய மதயானைத் திரளிலும்; செம்பொன் நெடுந்தேர்த் தொகை - செம்பொன்னாலான நீண்ட தேர்க் கூட்டத்திலும்;