பக்கம் எண் :

                 
காந்தருவ தத்தையார் இலம்பகம் 471 

மாக்டல் - புரவிக் கடலிலும்; சேனை வெள்ளம் - படைவீரர் குழுவிலும்; அம் பொன் மணிப் பூண் அரசும் - அழகிய பொன்னும் மணியுமான பூணணிந்த மன்னர் திரளிலும்; நம்பன் சிலைவாய் நடக்கும் கணை மிச்சில் அல்லால் இலை - சீவகன் வில்லில் இருந்து வெளிவரும் அம்பின் எச்சிலே அல்லாமல் வேறு இல்லை; என்று நக்கான் - என்றறிந்த பதுமுகன் இனி எங்ஙனம் பொருவதென வியந்து நகைத்தான்.

 

   (வி - ம்.) இனி நான்கு படையினும் தான் சொரிந்தான்; சொரிந்தபின், அவன் கணைமாரி முன்பே கலந்ததனைக் கண்டான் என்றுமாம். இதற்கு முன்பே அம்பாற் குறைந்த படைமேல் தைத்த அம்பினைக் கையுணர்ந்து தென்க - நச்சினார்க்கினியர் முற்செய்யுளுடன் இதனையும் ஒரு தொடராக்கிக் கூறும் கருத்து இது.

( 317 )

வேறு

 
810 ஒருவனே சிலையு மொன்றே
  யுடையதோர் களிற்றின் மேலா
னருவரை மார்பிற் சென்ற
  தறிந்தில னெஃக மின்னும்
பொருவரோ மன்ன ரென்றான்
  பொருசிலை மடக்கி யிட்டார்
வருகளி யானை மீட்டார்
  வாட்படை வாங்கிக் கொண்டார்.

   (இ - ள்.) ஒருவனே - (இவ்வாறு நகைத்த) பதுமுகன் துணையில்லாதவனே; சிலையும் ஒன்றே உடையது - (சேம வில்லும் இல்லை) ஒரு வில்லே உளது; ஓர் களிற்றின் மேலான் - ஒரே யானை யூர்ந்து வந்துளான்; எஃகம் அருவரை மார்பில் சென்றது இன்னும் அறிந்திலன் - வேலொன்று அரிய வரையனைய தன்மார்பிலே தைத்துள்ளதை இன்னும் அறியான்; பொருவரோ மன்னர் என்றான் - (மேலும்) போர்செய்வாரோ இவ் வேந்தர்கள் என்றுரைத்தான்; (அது கேட்ட மன்னர் அஞ்சி) பொருசிலை மடக்கியிட்டார் - பொருவதற்குரிய வில்லை மடக்கிக்கொண்டனர்; வருகளியானை மீட்டார் - மதயானையைத் திருப்பிக் கொண்டனர்; வாள்படை வாங்கிக்கொண்டார் - வாட்படையை (போர் நினைவில் இருந்து திருப்பி) உறையிற் கொண்டனர்.

 

   (வி - ம்.) 'நச்சினார்க்கினியர், பதுமுகன் நொந்தானென்று வாளை உறையிலிருந்து அவனொடு பொர வாங்கிய மன்னர்களெல்லோரும் அஞ்சி யானைகளைத் திருப்பினர் என்றும், சீவகன் தோழர்கள் வில்லை மடக்கிக் கொண்டனர்' என்றும் கூறுவர். 'இன்னும் மன்னர் பொருவரோ?' என்று கூட்டி 'நம்பன் கணைக்க மிச்சிலாய பின்னும்' என்றும் விளக்கங் கூறுவர் அவர்

( 318 )