காந்தருவ தத்தையார் இலம்பகம் |
472 |
|
811 |
செங்கண்மா றெழிக்ப் பட்ட |
|
வலம்புரித் துருவங் கொண்ட |
|
சங்குவாய் வைத்து நம்பன் |
|
றெழித்தலுந் தறுக ணாளி |
|
பொங்கிய முழக்கின் வேழப் |
|
பேரினம் புலம்பி னாற்போற் |
|
றங்குதார் மன்ன ரெல்லாந் |
|
தளர்ந்துகண் சாம்பி னாரே. |
|
(இ - ள்.) செங்கண்மால் தெழிக்கப்பட்ட வலம்புரித் துருவம் கொண்ட - கண்ணனாற் பாரதப் போர்ரில் முழக்கப்பெற்ற வலம்புரியை ஒப்பாகக் கொண்ட; சங்கு வாய் வைத்து நம்பன் தெழித்தலும் - சங்கை வாயில் வைத்துச் சீவகன் முழக்கினவுடன்; தறுகண் ஆளி பொங்கிய முழக்கில் - அஞ்சாத ஆளியின் பெரு முழக்கினாலே; வேழப் பேரினம் புலம்பினாற்போல் - களிற்றுப் பெருந்திரள் கலங்கினாற் போல; தங்குதார் மன்னர் எல்லாம் தளர்ந்து கண் சாம்பினார் - மார்பில் தங்கிய தாரணிந்த வேந்தர்கள் எல்லோரும் தளர்ச்சியடைந்து கண்ணொளி மழுங்கினர்.
|
|
(வி - ம்.) அவர் அஞ்சினமை கண்டு வெற்றிச் சங்கு முழக்கினான். துருவம் - ஒப்பு.
|
( 319 ) |
811 |
அருவரை நாகஞ் சுற்றி |
|
யாழியான் கடைய வன்று |
|
கருவரை குடையப் பட்ட |
|
கடலெனக் கலங்கி வேந்தர் |
|
திருவரை மார்பன் றிண்டோ் |
|
மஞ்ஞையே முருகன் தானென் |
|
றொருவரோ டொருவர் கூடா |
|
வண்ணமே யுடைய லுற்றார். |
|
(இ - ள்.) ஆழியான் அருவரை நாகம் சுற்றி அன்று கடைய - திருமால் அரிய மந்தர மலையை நாகத்தாற் பிணித்து முற்காலத்திற் கடைந்தபோது; கருவரை குடையப்பட்ட கடல் என வேந்தர் கலங்கி - கரிய அம் மலையினாலே கலக்கப்பெற்ற கடலென்னுமாறு மன்னர் கலக்குற்று; திருவரை மார்பன் திண்தேர் மஞ்ஞையே - அழகிய மலையனைய மார்பனின் திண்ணிய தேர் மயிலே; தான் முருகன் என்று - சீவகன் முருகனே
|
|