பக்கம் எண் :

                   
காந்தருவ தத்தையார் இலம்பகம் 473 

என்று; ஒருவரோடு ஒருவர் கூடா வண்ணமே உடையல் உற்றார் - ஒருவருடன் ஒருவர் சேராதவாறே புறங்கொடுத் தோடலுற்றார்.

 

   (வி - ம்.) கருவரை - பெருமலையுமாம். அவன் பல கைகளாற்படை வழங்கினாற்போல இவனும் படை வழங்குதலாலும் வடிவாலும் முருகனே என்பர் நச்சினார்க்கினியர்.

( 320 )
813 முளிமரக் காடு மேய்ந்த
  முழங்கழல் போன்று மைந்தன்
றெளிநலக் குமரர் கூற்றிற்
  றெழித்தனர் பகழி சிந்தி
யொளிநல வுப்புக் குன்ற
  மூர்புனற் குடைந்த தேபோற்
களிநல மன்னர் தங்கள்
  கடற்படை யுடைந்த தன்றே.

   (இ - ள்.) முளி மரக் காடு மேய்ந்த முழங்கு அழல் போன்று - காய்ந்த மரமுடைய காட்டைப் பற்றிய ஆரவாரமிகும் அழலைப் போல; மைந்தன் தெளிநலம் குமரர் கூற்றின் தெழித்தனர் - சீவகனும் தெளிநலமுடைய அவன் தோழரும் தம்பியரும் கூற்றுவனைப் போல முழங்கினர்; ஒளிநலம் உப்புக் குன்றம் ஊர் புனற்கு உடைந்ததே போல் - (அம் முழக்கினைக் கேட்டு) ஒளியும் அழகும் உடைய உப்புமலை ஊரும் வெள்ளத்திலே கரைந்தாற்போல; களிநல மன்னர் தங்கள் கடல் படை பகழி சிந்தி உடைந்தது - களிப்பும் அழகுமுடைய அரசரின் கடல் போன்ற படை கையிலுள்ள அம்புகளையும் எறிந்துவிட்டு ஓடியது.

 
814 உறுபடை மன்னர் தம்மை
  யுடற்றியொன் றானு மின்றிச்
சிறுபடை யவர்கள் வென்று
  செகுப்பவோ வென்ன வேண்டா
செறியெயிற் றாளி வேழப்
  பேரினஞ் செகுத்த தன்றே
வுறுபுலி யொன்று தானே
  கலையின முடற்றிற் றன்றே.

   (இ - ள்.) சிறு படையவர்கள் உறுபடை மன்னர் தம்மை - சிறிய படையினர் பெரும்படையுடைய வேந்தர்களை; உடற்றி ஒன்றானும் இன்றி - வருத்தித் தமககோர் கெடுதியும் இல்லாமல்;