காந்தருவ தத்தையார் இலம்பகம் |
475 |
|
நாந்தகம் - வாள். அத்திரம் - அம்பு. குணத்தின் மிக்கார் வெற்றிலை விடினும் என்றதற்கேற்பத் தீமையிடங் கொண்ட மனத்தினார் வேல் விடினும் வெற்றிலையாம்; அவர்க்கு வென்றி இல்லை எனவும் கொள்க.
|
( 323 ) |
816 |
குழையுடை முகத்தி னாள்கண் |
|
கோணைப்போர் செய்த மன்னர் |
|
மழையிடை மின்னி னொய்தா |
|
 மறைந்தனர் விஞ்சை வேந்தர் |
|
முழையிடை சிங்க மன்னான் |
|
மொய்யம ரேத்தி யார்த்தார் |
|
விழவுடை வீதி மூதூர் |
|
விருப்பொடு மலிந்த தன்றே. |
|
(இ - ள்.) குழை உடை முகத்தினாள்கண் கோணைப் போர் செய்த மன்னர் - குழையுடைய முகத்தாள் தத்தை காரணமாக மாறுபட்ட போரைச் செய்த வேந்தர்கள்; மழையிடை மின்னின் நொய்தா மறைந்தனர் - முகிலிடை மின்போலப் போன இடந் தெரியாமல் விரைந்து கரந்தனர்; விஞ்சை வேந்தர் முழையிடைச் சிங்கம் அன்னான் மொய் அமர் ஏத்தி ஆர்த்தார் - (முகிலிலே நின்று போரைக் கண்டிருந்த) வித்தியாதர வேந்தர்கள் முழையிலே நின்ற சிங்கம் போன்ற சீவகனின் செறிந்த போரைப் புகழ்ந்து முழங்கினர்; விழவு உடை வீதி மூதூர் விருப்பொடு மலிந்தது - விழா நடைபெறும் தெருக்களையுடைய பழம்பதி (சீவகனைக் காண) விருப்பத்தினால் மிக்கது.
|
|
(வி - ம்.) முழை, இல்லறம் பூண்டற்குக் கூறிற்று.
|
|
கோணைப்போர் - அறங்கோடிச் செய்யும் போர். விஞ்சை வேந்தர் - இவர் முன்னரே தம்மரசிளங் குமரியாகிய தத்தையின் பொருட்டு நிகழும் இப் போரினை முகின்மிசையிருந்து கண்டிருந்த வித்தியாதரர். சிங்க மன்னான் : சீவகன், விருப்பொடு என்பது சீவகனைக் காணும் விருப்பத்தோடே என்பதுபட நின்றது.
|
( 324 ) |
817 |
பார்மிசை யுலக மேத்தும் |
|
படுகளங் கண்டு பற்றார் |
|
போர்முகக் களிற்று வெண்கோ |
|
 டுழதசெஞ் சால்கொண் மார்பின் |
|
சீர்முகத் தோழர் சூழச் |
|
சீவகன் திருவின் சாயல் |
|
வார்முக முலையி னாளை |
|
மனைவயிற் கொண்டு புக்கான். |
|