பக்கம் எண் :

                   
காந்தருவ தத்தையார் இலம்பகம் 476 

   (இ - ள்.) சீவகன் பற்றார் போர் முகக் களிற்று வெண்கோடு உழுத செஞ்சால் கொள் மார்பின் சீர்முகத் தோழர் சூழ - சீவகன், பகைவருடைய போர்க்களத்திலே யானையின் வெண்கோடு கீறிய சிவந்த சாலைக் கொண்ட மார்பினரான சிறப்பு மிக்க தோழர்கள் சூழ; பார் மிசை உலகம் ஏத்தும் படுகளம் கண்டு - உலகிலே உயர்ந்தவர் புகழும் போர்க்களத்தைக் கண்டு களவேள்வி முடித்து; திருவின் சாயல் வார்முக முலையினாளை - திருமகளின் மென்மையைக் கொண்ட வாரிறுக்கிய முலையாளாகிய தத்தையை; மனைவயின் கொண்டுபுக்கான் - தன் மனைக்கு அழைத்துச் சென்றான்.

( 325 )
818 நெய்க்கழி வைக்கப் பட்டார்
  நெய்ப்பத்தல் கிடத்தப் பட்டார்
புக்குழி யெஃக நாடி
  யிரும்பினாற் போழப் பட்டார்
மைக்கிழிந் தொழுகுங் கண்ணீர்
  மாநிலத் துகுக்கப் பட்டார்
கைக்கிழி கொடுக்கப் பட்டார்
  கலம்பல நல்கப் பட்டார்.

   (இ - ள்.) நெய்க்கிழி வைக்கப்பட்டார் - (படை கிழித்த புண்களில்) நெய் தோய்த்த துணி வைக்கப்பட்டார்; நெய்ப்பத்தல் கிடத்தப்பட்டார் - நெய் நிறைந்த சாலிலே கிடத்தப் பட்டனர்; எஃகம் புக்குழி நாடி இருப்பினாற் போழப்பட்டார் - படைகள் புகுந்த இடத்தை ஆராய்ந்து வாளினாற் பிளந்து வாங்கப்பட்டனர்; கலம்பல நல்கப்பட்டார் - (இவ்வாறு போரில் விழுப்புண் பட்டோர் எல்லோரும்) அணிகலன் பலவும் கொடுக்கப்பட்டனர்; மைக்கு இழிந்து ஒழுகும் கண்ணீர் மாநிலத்து உகுக்கப்பட்டார் - மையில் தோய்ந்து வடியும் கண்ணீர் கொண்டு சுற்றம் அழுமாறு போரில் இறந்தவர் எல்லோரும்; கைக் கிழி கொடுக்கப்பட்டார் - கை நிறைந்த பொன் முடிப்பைக் கொடுக்கப்பட்டனர்.

 

   (வி - ம்.) பட்டவர் சுற்றத்தார்க்குக் கிழி கொடுக்கப்பட்டது.

 

   நெய்க்கிழி - நெய்யில் தோய்த்த துணி. நெய்ப்பத்தல் - நெய்யிட்டு வைத்த சால் கைக்கிழி - கையோலை. அஃதாவது : இன்னார் இன்னவை பெறுக என்று ஓலையில் எழுதிக் கொடுத்து மானியம் விடுதல்.

( 326 )
819 முதுமரப் பொந்து போல
  முழுமெயும் புண்க ளுற்றார்க்
கிதுமருந் தென்ன நல்லா
  ரிழுதுசோ் கவளம் வைத்துப்