காந்தருவ தத்தையார் இலம்பகம் |
477 |
|
819 |
பதுமுகன் பாவை மார்பி |
|
னெய்க்கிழி பயிலச் சோ்த்தி |
|
நுதிமயிர்த் துகிற்குப் பாயம் |
|
புகுகென நூக்கி னானே. |
|
(இ - ள்.) முதுமரப் பொந்து போல முழுமெயும் புண்கள் உற்றார்க்கு - முதிய மரங்களிடையே பொந்து போல மெய்யெலாம் புண்களைக் கொண்டவர்க்கு; இது மருந்து என்ன நல்லார் இழுது சேர் கவளம் வைத்து - இது தக்க மருந்து என்று மருத்துவ மகளிர் நெய்கலந்த கவளத்தை வைப்ப; பதுமுகன் பாவை மார்பின் - பதுமுகனுடைய அகன்ற மார்பிலே; நெய்க்கிழி பயிலச் சேர்த்தி - நெய்த்துணியைப் பொருந்த அடைத்து; நுதிமயிர்த் துகில் குப்பாயம் புகுக என நூக்கினான் - எலிமயிராற் செய்த உள்ளே துணி பொருத்திய சட்டையிலே புகுக என்று சீவகன் காத்தனன்.
|
|
(வி - ம்.) குப்பாயம் - சட்டை. நூக்கினான் - காத்தான். வைத்து - வைப்ப. இவை யிரண்டு செய்யுளானும் போரிற் புண்ணுற்றார்க்குச் செய்யும் மருத்துவம் கூறப்பட்டது.
|
|
புண்ணினது பெருமைக்கு முதுமரப்பொந்து உவமை : ”முழைபடு முதுமரம்போல் எவ்வாயும் படைநுழைந் தறுத்த இடனுடை விழுப்புண்” என்றார் பிறரும் (தகடூர்). மெய் முழுதும் என்க. இழுது - நெய். மயிர்க்குப்பாயம் - கம்பளிச் சட்டை. இதனை ”எலி மயிராற் செய்த சட்டை” என்பர் நச்சினார்க்கினியர்.
|
( 327 ) |
820 |
பார்கெழு பைம்பொன் றன்னாற் |
|
பண்ணவ னுருவ மாக்கி |
|
யூர்கெழு விழவு செய்தாங் |
|
குறுபொரு ளுவப்ப நல்கித் |
|
தார்கெழு மின்னு வீசித் |
|
தனிவடந் திளைக்கு மார்பன் |
|
போர்கெழு களத்துப் பாவம் |
|
புலம்பொடு போக்கி னானே. |
|
(இ - ள்.) தார் கெழு மின்னு வீசித் தனி வடம் திளைக்கும் மார்பன் - தாரும் ஒளி வீசிய ஒப்பற்ற முத்து வடமும் பயிலும் மார்பனான் சீவகன்; பார்கெழு பைம்பொன் தன்னால் பண்ணவன் உருவம் ஆக்கி - பாறையிற் பொருந்திய பசிய பொன் கொண்டு அருகன் உருவம் சமைத்து; ஊர் கெழு விழவு செய்து - நகரிற் பொருந்திய திருவிழா நடத்தி; ஆங்கு உறு பொருள் உவப்ப நல்கி - அங்கேயே மிகுபொருளை வறியவர் மகிழ அளித்து;
|
|