காந்தருவ தத்தையார் இலம்பகம் |
479 |
|
(இ - ள்.) கருமணி அழுத்திய காமர் செங்கதிர்த் திருமணிச் செப்புஎன - கரிய மணியை அழுத்திய அழகிய சிவந்த கதிரையுடைய மணிச் செப்பென்னுமாறு; செறிந்த வெம்முலை - நெருங்கிய விருப்பூட்டு முலைகளிலே; அருமணி அலம்வரும் அம் பொன் கொம்பு அனாள் - அரிய மணிகள் அசையும் அழகய பொற்கொடி போன்ற தத்தையின்; பெருமணக் கிழமை யாம் பேசுகின்றது - பெரிய மணத்தின் இயல்பு இனி எம்மால் விளக்கப்படுவது.
|
|
(வி - ம்.) பெருமணமாம் கிழமையென மாற்றுவர் நச்சினார்க்கினியர்.
|
|
கருமணி - நீலமணி; இது முலைக்கண்ணுக்குவமை. செங்கதிர்த் திருமணி என்றது, செவ்வொளியுடைய மாணிக்க மணியை. மணிச் செப்பு முலைக்குவமை. மணக்கிழமை என்றது திருமணத்திற் செய்யும் கரணங்களை. இதனைச் 'சமாவர்த்தனம்' என்ப.
|
( 330 ) |
823 |
நான்குநூ றாயிரங் குடத்து நல்லன |
|
வான்றயிர் பானெயோ டழகி தாநிறைத் |
|
தூன்றிகழ் வேலினான் வேள்விக் கூர்மருள் |
|
கோன்றொறுக் காவலன் கொண்டு முன்னினான். |
|
(இ - ள்.) ஊன் திகழ் வேலினான் வேள்விக்கு - ஊன் பொருந்திய வேலேந்திய சீவகன் திருமண வேள்விக்கு; ஊர் மருள் கோன் தொறுக்காவலன் - ஊரார் வியக்கும் அரசனுடைய ஆநிரை காவலன் (நந்தகோன்); நான்று நூறாயிரம் குடத்து - நான்கு நூறாயிரம் குடங்களிலே; நல்லன ஆன் தயிர் பால் நெயோடு அழகிது ஆநிறைத்து - நல்லனவாகிய பசுந் தயிரையும் பாலையும் நெய்யையும் அழகுற நிறைத்து; கொண்டு முன்னினான் - (எடுத்துக்) கொண்டு முதலில் வந்தான்.
|
|
(வி - ம்.) இழந்தேம் என்று ஊரார் மருளும் சச்சந்த மன்னனுடைய தொறுக் காவலனும் ஆம். அரசனுக்குரிய ஆநிரையின் தலைவன் என்பதே எவ்வாறாயினும் பொருந்தும் பொருள் 'மன்னிரை பெயர்த்து' (சீவக, 440) 'மன்னவன் னிரை' (415) என முன்னரும் வந்தன காண்க.
|
|
இதுமுதல் சமாவர்த்தனம் நடவா நிற்கப் பச்சை புகுந்தபடி கூறுகின்றார். (சமாவர்த்தனம் - பிரமசரியம் முடித்தற்குச் செய்யுங்கிரியை. பச்சை புகுதல் - வரிசை வருதல்).
|
( 331 ) |
824 |
வளைநிற வார்செநெ லரிசிப் பண்டியோ |
|
டளவறு சருக்கரைப் பண்டி யார்ந்தன |
|
பிளவியல் பயறுபெய் பண்டி யுப்புநீர் |
|
விளைவமை பண்டியின் வெறுத்த தாங்கொர்பால |
|