| காந்தருவ தத்தையார் இலம்பகம் |
480 |
|
|
(இ - ள்.) வளை நிற வார் செநெல் அரிசிப் பண்டியோடு - சங்கு நிறமுடைய நீண்ட செந்நெல் லரிசிப் பண்டியும்; அளவு அறு சருக்கரைப் பண்டி ஆர்ந்தன - அளவற்ற சருக்கரைப் பண்டியும் நிறைந்தன; பிளவு இயல் பயறு பெய் பண்டி - உடைக்கப்பட்ட பயறு பெய்த பண்டியுடன், நீர் விளைவு அமை உப்புப் பண்டியின் - நீரில் விளையும் உப்புப் பண்டியும்; ஆங்கு ஓர் பால் வெறுத்தது - அந்த மனையிலே ஒரு பக்கத்தில் செறிந்தது.
|
|
|
(வி - ம்.) வளைநிற அரிசி, வார்செநெல் அரிசி எனத் தனித்தனிக் கூட்டுக. பண்டி - வண்டி. பிளவு இயல் பயறு - பருப்பாக உடைத்த பயறு. நீர்விளைவு அமைஉப்பு என மாறுக.
|
( 332 ) |
| 825 |
சினைத்துணர் முழவன பலவின் றீங்கனி |
| |
கனைத்துவண் டுழல்வன வாழை மாங்கனி |
| |
யெனைத்துள கிழங்குகாய் குருகொ டேந்திய |
| |
சனத்தினாற் றகைத்திடம் பெறாது தானொர்பால். |
|
|
(இ - ள்.) பலவின் சினைத் துணர் முழவு அன தீங்கனி - பலவின் கிளைகளில் உள்ள கொத்தினை யுடைய முழவு போன்ற இனிய கனியும்; வண்டு கனைத்து உழல்வன வாழை மாங்கனி - வண்டுகள் முரன்று உழலும் வாழைக் கனியும் மாங் கனியும்; கிழங்கு காய் குருகு எனைத்து உள - கிழங்குங் காயும் குருத்தும் எவ்வளவு உள்ளனவோ; ஏந்திய சனத்தினால் - அவ்வளவெல்லாம் ஏந்திய மக்களால்; தகைத்து தான் ஒர்பால் இடம்பெறாது - நெருங்கி ஒரு பக்கந்தான் இடம் பெறாது.
|
|
|
(வி - ம்.) துணர்த் தீங்கனி, முழவன தீங்கனி எனத் தனித்தனிக் கூட்டுக. ”கானப்பலவின் முழவு மருள் தீங்கனி” என்றார் மலைபடுகடாத்தினும் (511). கனைத்து - செறிந்து எனினுமாம். குருகு - குருத்து. சனம் - மாந்தர்.
|
( 333 ) |
| 826 |
மரகத மணிப் பசுங் காய்கொள் வான்குலை |
| |
கவர்பழுக் காய்க்குலை கனியக் காவுறீஇ |
| |
யிவர்தரும் மெல்லிலைக் காவு மேந்திய |
| |
வுவரியாய்ச் சொரிந்திடம் பெறாது தானொர்பால். |
|
|
(இ - ள்.) மரகத மணிப் பசுங்காய் கொள் வான் குலை - மரகத மணிபோலும் பசுங் காயக்ளைக் கொண்ட குலையும்; கவர் பழுக்காய்க் குலை - விரும்பத்தக்க பழுக்காய்க் குலையும்; கனியக் கா வுறீஇ இவர் தரும் மெல்லிலைக் காவும் முற்றிலும் காவடியிலே கொண்டு வந்து, பரப்பி வைத்திருக்கும் வெற்றிலைப் படலிகையும்; சொரிந்து ஏந்திய உவரியாய் - (சுமந்து வந்து) சொரிந்திடுதலால் உயர்ந்த வெள்ளமாகி; ஒர்பால்தான் இடம் பெறாது - ஒரு பக்கந்தான் இடம் பெறாது.
|
|