| காந்தருவ தத்தையார் இலம்பகம் |
481 |
|
|
(வி - ம்.) பசுங்காயும் பழுக்காயும் பாக்குவகை. ஏந்திய - உயர்ந்த. 'வேண்டிய' என்பதூஉம் பாடம். படலிகை - பெட்டி.
|
|
|
கவர்பழுக்காய் : வினைத்தொகை; கண்டோர் நெஞ்சைக் கவரும் பழுக்காய் என்க. பழுக்காய் என்றது பாக்கினை. கா-காவுதடி. இதனை இக் காலத்தார் காவடி என்பர். மெல்லிலை, வெற்றிலை : வினைத்தொகை. உவரி - வெள்ளம்.
|
( 334 ) |
| 827 |
சண்பகந் தமநகந் தமால மல்லிகை |
| |
தண்கழு நீரொடு குவளை தாமரை |
| |
வண்டின மிசைகொள வாசப் பூச்சுமை |
| |
கொண்டவர் குழாம்பொலி வுற்ற தாங்கொர்பால். |
|
|
(இ - ள்.) சண்பகம் தமநகம் தமாலம் மல்லிகை தண் கழுநீரொடு குவளை தாமரை - சண்பகமும் தமநகக் கொழுந்தும் பச்சிலையும் மல்லிகையும் தண்ணிய கழுநீரும் குவளையும் தாமரையும் ஆகிய; வாசப் பூச்சுமை வண்டினம் மிசைகொள - மணமுறும் மலர்ச் சுமையை வண்டுகள் மொய்க்க; கொண்டவர் குழாம் ஆங்கு ஒர்பால் பொலிவு உற்றது - கொண்டுவந்தவர் திரள் மற்றொரு பக்கத்திலே அழகுற்றது.
|
|
|
(வி - ம்.) தமநகம் - மருக்கொழுந்து. தமாலம் - பச்சிலை என்னுமொரு நறுமணமுடைய கொழுந்து.
|
( 335 ) |
| 828 |
ஆர்கெழு குறடுசூட் டாழி போன்றவன் |
| |
சீர்கெழு வளமனை திளைத்து மாசனங் |
| |
கார்கெழு கடலெனக் கலந்த வல்லதூஉம் |
| |
பார்கெழு பழுமரப் பறவை யொத்தவே. |
|
|
(இ - ள்.) ஆர் கெழு குறடு சூட்டு ஆழி போன்ற அவன் சீர்கெழு வளமனை - ஆர் பொருந்திய குறடும் சூட்டுமுடைய சக்கரம் போன்ற கந்துகனுடைய சிறப்புப் பொருந்திய வளமனையிலே; மாசனம் திளைத்துக் கார் கெழு கடல் எனக் கலந்த - மக்களின் திரள் நெருங்கி (ஒலியினாற்) கருமை பொருந்திய கடல்போலக் கலந்தன; அல்லதூஉம் பார்கெழு பழுமரப் பறவை ஒத்தவே - அஃதன்றி அம் மக்கள் தொகுதி (பயன்கொள்ளும் முறையால்) நிலமிசை பொருந்திய பழுத்த மரத்திற் பறவைகளையும் போன்றன.
|
|
|
(வி - ம்.) அச்சுக் கோக்குங் குறடு மாளிகைக்கு, நடுவு போக்கும் ஆர் தெருவுகளுக்கும், விளிம்பிற் சூட்டு மதிலுக்கும் உவமை. மற்றும், மனையைச் சூழ வரிசைப் பொருள்கள் நிறைத்தலின் கடல் போன்றென்றுமாம்.
|
|