காந்தருவ தத்தையார் இலம்பகம் |
482 |
|
ஆர் - ஆரக்கால். குறடு - தேர்க்குடம். மாசனம் - மிக்க மாந்தர்; மக்கட்கூட்டம். ஆழி - தேருருள். இது சீதத்தனுக்கு (அல்லது சீவகனுக்கு) குடும்ப பாரம் சுமத்தற்கு உவமையாக வந்தது எனக் கொள்ளினுமாம்.
|
( 336 ) |
829 |
கையுறை யெழுதினர் கைந்நொந் தேடறுத் |
|
தையென விருப்பமற் றன்ன தாதலான் |
|
வையக மருங்கினின் வாழ்நர் மற்றிவன் |
|
செய்தவ நமக்கிசை கென்னச் சென்றதே. |
|
(இ - ள்.) கை உறை எழுதினர் கை நொந்து ஏடு அறுத்து ஐ என இருப்ப - வந்த வரிசைகளின் கணக்கை எழுதியவர்கள் கை வருந்திப் பட்டோலைகளைக் கிழித்து வியந்திளைப்பாறி இருப்பார்கள்; அன்னது ஆதலான் - வரிசை அங்ஙனம் மிகுதலால்; வையகம் மருங்கினின் வாழ்நர் - உலகிடை வாழ்கின்றவர்கள்; இவன் செய்தவம் நமக்கு இசைக என்னச் சென்றது - இவன் செய்யும் தவம் நமக்குப் பொருந்துவதாக என்று நினைக்குமாறு சமாவர்த்தனம் நடைபெற்றது.
|
|
(வி - ம்.) தவம்: சமாவர்த்தனம். மற்று : அசை.
|
|
கையுறை - வரிசைப் பொருள். ஐயென : குறிப்புச் சொல். சென்றது - நிகழ்ந்தது.
|
( 337 ) |
830 |
வாலரி கழுவிய வண்ணச் செம்புனல் |
|
காலிய லிவுளியும் களிறு மாழ்ந்தவண் |
|
கோலநீர்க் குவளையும் மரையும் பூத்துவண் |
|
டாலிவண் குருகுபாய் தடங்க ளானவே. |
|
(இ - ள்.) வால் அரி கழுவிய வண்ணம் செம்புனல் - வெள்ளிய அரிசியைக் கழுவிய அழகிய சிவந்த கழுநீர்; கால் இயல் இவுளியும் களிறும் ஆழ்ந்து - காற்றெனச் செல்லும் குதிரையும் களிறும் அமிழ; அவண் கோல நீர்க் குவளையும் மரையும் பூத்து - அங்கே அழகிய நீர்ப் பூக்களாகிய குவளையும் தாமரையும் மலர்ந்து; வண்டு ஆலி - வண்டுகள் முரன்று; வண் குருகு பாய் தடங்கள் ஆன - மிகுதியாகப் பறவைகள் பாயும் நீர் நிலைகளாயின.
|
|
(வி - ம்.) வாலரி - வெள்ளிய அரிசி. காலியல் இவுளி - காற்றென விரையும் குதிரை. ஆலுதல் - ஒலித்தல். குருகு - நாரை.
|
( 338 ) |
831 |
உடுப்பன துகில்களு முரைக்கு நானமுந் |
|
தொடுத்தன மாலையுங் குழையுஞ் சாந்தமுங் |
|
கொடுப்பவர் கொள்பவர் வீழ்த்த பல்கல |
|
மடுத்துவிண் பூத்ததோ ரழகின் மிக்கதே. |
|