காந்தருவ தத்தையார் இலம்பகம் |
483 |
|
(இ - ள்.) உடுப்பன துகில்களும் - உடுப்பனவாகிய ஆடைகளும்; உரைக்கும் நானமும் - பூசிக்கொள்ளும் புழுகும; தொடுத்தன மாலையும் - கட்டப்பட்ட மாலைகளும்; குழையும் சாந்தமும் - குழைகளும் சந்தனமும்; கொடுப்பவர் கொள்பவர் வீழ்த்த பல்கலம் - எடுத்துக் கொடுப்பவராலும் வாங்குவோராலும் வீழ்த்தப்பட்ட பலகலங்கள்; அடுத்து விண் பூத்ததோர் அழகின் மிக்கது - நெருங்கி வானிலே மலர்ந்த மீன்களைப் போன்றதாகிய அழகிலே மேம்பட்டது.
|
|
(வி - ம்.) கலன்கள் வீழ்த்தப்பட்ட அவ்விடம் விண்பூத்த அழகை ஒத்தது என்பதாம். உடுப்பன, தொடுத்தன: முற்றெச்சங்கள்.
|
( 339 ) |
833 |
ரிலங்குபொற் கிண்கிணி யிரங்கு மோசையு |
|
முலம்புமா லுவர்க்கட லொலியின் மிக்கவே. |
|
கலங்கழு மரவமுங் கருனை யாக்குவார் |
|
சிலம்பொலி யரவமு மிச்சில் சீப்பவ |
|
(இ - ள்.) கருனை ஆக்குவார் சிலம்பு ஒலி அரவமும் - பொரிக் கறிகள் சமைப்பவரின் சிலம்பொலிக்கும் ஒலியும்; கலம் கழும் அரவமும் - உண்கலம் கழுவும் ஒலியும்; மிச்சில் சீப்பவர் இலங்கு பொற் கிண்கிணி இரங்கும் ஓசையும் - எச்சில் மாற்றுவோரின் விளங்கும் கிண்கிணிகள் ஒலிக்கும் ஒலியும்; உலம்பும் மால் உவர்க் கடல் ஒலியின் மிக்கவே - முழங்கும் பெரிய உப்புக் கடல் ஒலியினும் மிகுந்தன.
|
|
(வி - ம்.) நச்சினார்க்கினியர் 829 முதல் 832 வரை ஒரு தொடர் ஆக்கி, அவற்றை 829, 832, 830, 831 ஆக முறைப்படுத்தி, 'வையகம் மருங்கினின் வாழ்நர் மற்றிவன் - செய்தவம் நமக்கிசை கென்னச் சென்றதே' என்னும் 829-ஆஞ் செய்யுளின் பின்னிரண்டடிகளைக் கொணர்ந்து 832 ஆம் செய்யுட்குப் பின்சேர்த்துப் பொருளுரைப்பர்.
|
|
உலம்பும் - முழங்கும். கழும் : கழுவும் என்பதன் இடைக்குறை. இந் நான்கு செய்யுட்களும் உயர்வு நவிற்சி.
|
|
கழுவும் என்னும் செய்யுமெனெச்சத்து ஈற்றுயிரும் மெய்யும் கெட்டுக் கழும் என நின்றது. கருனை - பொரிக்கறி. மிச்சில் - துரால். சீத்தல் - கூட்டுதல். இரங்கும் - ஒலிக்கும. உலம்பும் - முழங்காநின்ற.
|
( 340 ) |
வேறு
|
|
833 |
மூழிவாய் முல்லை மாலை |
|
முருகுலாங் குழலி னாளு |
|
மூழிவாய்த் தீயொ டொக்கு |
|
மொளிறுவாட் டடக்கை யானு |
|