பக்கம் எண் :

                 
காந்தருவ தத்தையார் இலம்பகம் 484 

833 மாழிவாய் விரலிற் காம
  னம்பொடு சிலைகை யேந்தத்
தாழிவாய்க் குவளை வாட்கட்
  டையலார் பரவச் சார்ந்தார்.

   (இ - ள்.) மூழிவாய் முல்லை மாலை முருகு உலாம் குழலினாளும் - மலர்ப் பெட்டியில் இருந்த முல்லை மாலை யணிந்து மணங்கமழுங் கூத்தலையுடைய தத்தையும்; ஊழிவாய்த் தீயொடு ஒக்கும் ஒளிறுவாள் தடக்கையானும் - ஊழிக்காலத் தீயைப் போன்று விளங்கும் வாளேந்திய தடக்கைச் சீவகனும்; காமன் அம்பொடு சிலை ஆழிவாய் விரலின் கையேந்த - காமன் அம்பையும் வில்லையும் விரற்சரடணிந்த விரலையுடைய கையில் ஏந்த; தாழிவாய்க் குவளை வாள்கண் தையலார் பரவச் சார்ந்தார் - தாழியில் மலர்ந்த குவளையனைய வாட்கண் மங்கையர் பரவி நிற்க ஓரிருக்கையிலே சேர இருந்தனர்.

 

   (வி - ம்.) முருகு - மணம். குழலினாள்: தத்தை. ஊழிவாய்த் தீ - ஊழி முடிவில் உலகை அழிக்கும் நெருப்பும்; இது சீவகன் பேராற்றலுக்கு உவமை. தடக்கையான் - சீவகன். ஆழி - மோதிரம்; விரற்சரடுமாம். மூழிவாய் - பூப்பெட்டி.

( 341 )
834 இன்னிய முழங்கி யார்ப்ப
  வீண்டெரி திகழ வேதந்
துன்னினர் பலாசிற் செய்த
  துடுப்பினெய் சொரிந்து வேட்ப
சொரிந்தனன் வீர னேற்றான்
  வலம்புரி யதனீர் கொண்டான்
முன்னுபு விளங்கு வெள்ளி
  முளைத்தெழ முருக னன்னான்.

   (இ - ள்.) இன்னியம் முழங்கி ஆர்ப்ப - இனிய இசைக் கருவிகள் முழங்கிக்கொண்டிருக்க; ஈண்டு எரி திகழ - மிகுதியான தீ விளங்குமாறு : வேதம் துன்னினர் - மறையுணர்ந்த சீவகனுக்கு நெருங்கிய அந்தணர்; பலாசின் செய்த துப்பின் - புரசமரத்தாற் செய்த துடுப்பினால்; நெய் சொரிந்து வேட்ப - நெய்யை வார்த்து வளர்க்க; வெள்ளி முளைத்து எழ - வெள்ளி முளைத்த அளவிலே; வீரன் மின் இயல் கலசம் நன்னீர் சொரிந்தனன் - சீதத்தன் ஒளி பொருந்திய கலசத்திலே நன்னீரை வார்த்தனன்; முருகன் அன்னான் முன்னுபு ஏற்றான் - முருகனைப் போன்ற சீவகனும் கருதி ஏற்றான்.