காந்தருவ தத்தையார் இலம்பகம் |
485 |
|
(வி - ம்.) அரசர்க்கும் வணிகருக்கும் மந்திரத்திலும் தந்திரத்திலும் சிறிது வேறுபாடு உளதேனும், தான் இரண்டு குலத்திற்கும் உரிய சடங்கு நிகழ்த்துதற்குரியனாதலின், பிறர்க்குத் தெரியாமல், தன் குலத்திற்கேற்ற சடங்குதானே நிகழ்த்தினானென்பதும், பிறர்க்குத் தெரியுமவற்றிற்குக் கழுவாய் கருதினானென்பதும் தோன்ற, 'முன்னுபு' என்றார். முன்னுதல் - கருதுதல்.
|
( 342 ) |
835 |
இட்டவுத் தரிய மின்னு |
|
மெரிமணிப் பருமுத் தார |
|
மட்டவிழ் கோதை வெய்ய |
|
வருமுலை தாங்க லாற்றா |
|
நெட்டிருங் கூந்த லாட |
|
னோ்வளை முன்கை பற்றிக் |
|
கட்டழல் வலங்கொண் டாய்பொற் |
|
கட்டிறா னேறி னானே. |
|
(இ - ள்.) இட்ட உத்தரியம் மின்னும் எரி மணிப் பருமுத்தாரம் மட்டு அவிழ் கோதை வெய்ய வருமுலை - அணிந்த மேலாடையும் ஒளிவிடும் மணிமாலையும், முத்து மாலையும், மணம் விரியும் மலர்மாலையும் வெய்யனவாகி வளரும் முலைகளும் ஆகியவற்றை; தாங்கல் அற்றா நெட்டிருங் கூந்தலாள் தன் - தாங்க இயலாத நீண்ட கரிய கூந்தலையுடைய தத்தையின்; நேர்வளை முன்னகை பற்றி - ஒத்த வளையணிந்த முன்கையைப் பற்றி; கட்டழல் வலம் கொண்டு - கட்டழலை வலமாக வந்து; ஆய்பொன் கட்டில் ஏறினான் - ஆராய்ந்து செய்த பொற்கட்டிலை அடைந்தான்.
|
|
(வி - ம்.) கட்டிலேறுதல் என்பதும் ஒரு திருமணச் சடங்கு. இது பற்றிப் பெருங்கதை இலாவாண காண்டத்தில் கட்டிலேற்றியதென்னும் காதையில் விளக்கமாகக் கூறப்பட்டிருக்கின்றது.
|
( 343 ) |
836 |
மந்திரத் தரசன் காதன் மாதரம் பாவை தன்னைக் |
|
கந்துகன் சிறுவன் வேட்ட கடிவினை நொடியின் மற்றோ |
|
ரந்தர விசும்பிற் றேவர்க் கதிபதி யாய கோமா |
|
னிந்திரன் றனக்கு மாகா தென்பது நடந்த தன்றே. |
|
(இ - ள்.) மந்திரத்தரசன் காதல் மாதர் அம் பாவை தன்னை - விஞ்சை மன்னன் அன்புக்குரிய மகளாகிய பாவை தத்தையை; கந்துகன் சிறுவன் வேட்ட கடிவினை நொடியின் - கந்துகன் மகனான சீவகன் மணந்த மணவினையைக் கூறின்; மற்று ஓர் அந்தர விசும்பின் தேவர்க்கு அதிபதி ஆய கோமான் இந்திரன் தனக்கும் - வேறோரு நடுவாகிய வானத்திலே வான
|
|