காந்தருவ தத்தையார் இலம்பகம் |
487 |
|
எழினி வாங்கி - அழகிய பட்டினால் ஆகிய பொறித் திரையை வளைத்து; இன்முக வாசச் செப்பும் - இனிய முகவாசப் பொருள்கள் அடங்கிய செப்பினையும்; சந்தனச் சாந்தச் செப்பும் - சந்தன மரத்தால் அமைத்த சாந்து பெய்த செப்பினையும் ; தண்மலர் மாலை பெய்த இந்திர நீலச் செப்பும் - குளிர்ந்த மலர்மாலை அமைத்த இந்திர நீலச் செப்பினையும்; இளையவர் ஏந்தினார் - இளமங்கையர் ஏந்தி நின்றனர்.
|
|
(வி - ம்.) ஐந்தாவன: 'சிறுபூளை செம்பஞ்சு வெண்பஞ்சு சேணம் - உறுதூவி சேக்கை ஓரைந்து.' இருவரும் துயில் இரண்டும் இன்பந்துய்க்க ஒன்றும் வேண்டுதலின் அமளி மூன்றாயின. இனிய முகவாசமாவன : ”தக்கோலம் தீம்பூத் தகைசால் இலவங்கம் - கப்பூரம் சாதியோடைந்து. ” இவற்றோடு சருக்கரையும் தேனுங் கூட்டுப. இது முதலிற் கவுளிற் கொண்டு, பின்பு பாகு கவுள் கொள்ள வேண்டுதலின் வாசச் செப்பென்ற பெயர் சிறப்பினாற் பெற்ற பெயர்
|
( 346 ) |
839 |
கடைந்துபெய் மணிக்கைச் செம்பொற் |
|
காசறு தட்டிற் சூழ்ந்து |
|
மிடைந்துபெய் மணிக்கட் பீலி |
|
மின்னுசாந் தாற்றி பொன்னா |
|
ரடைந்துவீ சால வட்ட |
|
மரிவைய ரேந்தி யாற்றத் |
|
தடங்கண்கள் குவளை பூப்பத் |
|
தையலோ டாடு மன்றே. |
|
(இ - ள்.) கடைந்து பெய் மணிக்கைச் செம்பொன் காசு அறு தட்டின் - கடைந்து செய்த மணிக்கையினையும், செம்பொன்னாலாகிய குற்றம் அற்ற தட்டினையும்; சூழ்ந்து மிடைந்து பெய் மணிக்கண் பீலி - தன்னைச் சூழ்ந்து நெருங்கப் பெய்த, நீலநிறக் கண்களையுடைய பீலியையும் உடைய; மின்னு சாந்தாற்றி - மின்னுகின்ற சிற்றாலவட்டத்தையும்; அடைந்து வீசுபொன் ஆர் ஆலவட்டம் - அடைந்து விசிறும் பொன்னாலவட்டத்தையும்; அரிவையர் ஏந்தி ஆற்ற - மகளிர் ஏந்தி வந்து வீசிக் களைப்பைப் போக்க; தடம் கண்கள் குவளை பூப்ப - பெரிய கண்கள் செங்குவளை போலச் சிவக்க; தையலோடு ஆடும் - தத்தையோடு இன்பம் நுகர்வான்.
|
|
(வி - ம்.) மணிக்கை - மணியிழைத்த கைப்பிடி. ஆசு - குற்றம். மணிக்கண் - நீலமணி போன்ற நிறமுடைய புள்ளி. சாந்தாற்றி - சிற்றாலவட்டம் என்னும் ஒருவகை விசிறி. ஆடும் : இடக்கரடக்கல்.
|
( 347 ) |