காந்தருவ தத்தையார் இலம்பகம் |
489 |
|
கிளை என்னும் நரம்பின் இசையனைய இனிய மொழி கூறும் பவளவாய் விளங்க; வாய்விடான் - வாய்விடாமல்; அளமரல் இலாத இன்பக் கடலகத்து அழுந்தினான் - மனச் சுழல் இல்லாத இன்பக் கடலிலே அழுந்தினான்.
|
|
(வி - ம்.) புணர்ச்சி யிறுதிக்கண் மெய்ம்மறந்து முலைக்கண் துயிலும் துயிலை 'இன்பக் கடல்' என்றார்.
|
|
நச்சினார்க்கினியர் 839 முதல் 841 வரை மூன்று செய்யுட்களையும் ஒரு தொடராக்கி ஒரு செட்யுட் சொல்லை மற்றொருசெய்யுளிலே கொண்டு கூட்டிப் பொருள் கூறினார். கூறியபின் இறுதியில், 'இனிக்கரணவிசேடமாக்கிச் செவ்வனே பொருளுரைப்பாரும் உளர். அது பொருந்துமேனும் உணர்க' என்றனர்.
|
|
அவர் கூறும் பொருள்:
|
|
அங்ஙனம் இளையவரேந்திய துப்புரவுகளை நுகர்ந்து, காமன் அன்னான், திருவன்னாளை இளமுலை மணிக்கண் சிவப்பக் குழையப்புல்லி, அக் கோதை தன்னைப் பவளவாய் திகழ அல்குலிற் கலாபம் வீங்க அவ்விரண்டனையும் வாய்விடானாய் அமிர்தெனப் பருகினான். அங்ஙனம் பருகி, அத் தையலோடே கோதை சோர ஏங்கப் புருவம் ஏறக் கண்கள் குவளைபூப்ப ஆடும். அங்ஙனம் ஆடுதலிற் பிறந்த வியர்வை நீங்கும்படி சாந்தாற்றியையும் பொன்னாராலவட்டத்தையும் அரிவையர் ஏந்தித் தம்மை யடைந்து ஆற்றும்படி இன்பக் கடலகத்தே அழுந்தினான் என்க.
|
|
சேப்ப - சிவக்கும்படியும். கிளை - ஒருபண். தேன் சோர் கோதை என்றது காமச் செவ்வி கூறியபடியாம். அளமரல் - அலமரல்; சுழற்சி.
|
( 349 ) |
842 |
இன்னண மொழுகு நாளு |
|
ளிளமரக் காவு காண்பான் |
|
பொன்னணி மார்பன் சென்று |
|
புகுதலு மொருவன் றோன்றித் |
|
துன்னியோ ரோலை நீட்டித் |
|
தொழுதனன் பெயர்ந்து நிற்ப |
|
மன்னிய குருசில் கொண்டு |
|
மரபினால் நோக்கு கின்றான். |
|
(இ - ள்.) இன்னணம் ஒழுகும் நாளுள் - இவ்வாறு இன்பந்துய்க்கும் நாட்களில்; இளமரக் காவு காண்பான் - இளமரச் சோலை பார்ப்பதற்கு; பொன் அணி மார்பன் சென்ற புகுதலும் - பொன்னணி புனைந்த மார்பன் சென்று நுழைதலும்; ஒருவன் தோன்றித் துன்னி ஓர் ஓலை நீட்டி - ஒருவன் வந்து அருகில் வந்து ஓலையொன்றைக் கொடுத்து; தொழுதனன் பெயர்ந்து நிற்ப - வணங்கி மீண்டு சென்று நிற்க; மன்னிய குருசில் கொண்டு -
|
|