நாமகள் இலம்பகம் |
49 |
|
தனதின்பத்தை உலகை விரும்பப் பண்ணுதற்கு வான்நாடு மகிழ்ந்து வீழ்ந்தது என்னும்படி; மற்ற நாடு வட்டம் ஆக வைகும் - தன்னை யொழிந்த நாடுகள் தனக்கு எல்லையாக நிலைபெறும்; அது நல்தவம் செய்வார்க்கு இடம் - அது வீடு பெற நல்ல தவம் புரிவார்க்கும் இடம்; தவம் செய்வார்க்கும் இடம் - மறுமை நினைந்து இல்லறம் நடத்துவார்க்கும் இடம்; நற்பொருள் செய்வார்க்கும் இடம்-நல்ல பொருளைத் தருங் கல்வியைப் பயில்வார்க்கும் இடம்; அது பொருள் செய்வார்க்கும் இடம் - அதுவே நிலையில்லாத பொருளைத் தேடுவார்க்கும் இடம்.
|
|
(வி - ம்.) உம்மை இரண்டும் [தவஞ் செய்வார்க்கும் பொருள் செய்வார்க்கும் என்பவற்றிலுள்ளவை] இழிவு சிறப்பு. வெற்றம் - வெற்றி. வீழ்ந்ததென : விகாரம்.
|
|
'ஊருரைக்க நின்ற' (சீவக. 64) என்ற கவி முதலாக முடித்த வினைகளைச் சேர்த்து, அவற்றையுடைய நாடு விண் வீழ்ந்தென வைகும்; அஃது இவை செய்வார்க்கிடம் என்க.
|
|
விழைவிப்பான் : எதிர்கால வினையெச்சம். துறவியாகையால் வீடு பெறுந் தவத்தை 'நற்றவம்' என்றார். 'அறம் எனப்பட்டதே இல்வாழ்க்கை அஃதும் - பிறன்பழிப்ப தில்லாயின் நன்று' என்று திருவள்ளுவர் உரைப்பது காண்க.
|
|
நற்றவம் என்றும் தவம் என்றும் அடையடுத்தும் அடாதும் வந்த சொற்களுக்கு முன்னையது வீடுபெறுதற்குரியது என்றும், பின்னையது இல்லறம் என்றும், நற்பொருள் பொருள் என்று வருவனவற்றில் முன்னது கல்வி என்றும், பின்னது நென்மணி முதலிய பொருள் என்றும் நுண்ணிதின் உரை வகுக்கும் நச்சினார்க்கினியர் உரைநயம் உணர்ந்தின்புறற்பாற்று.
|
( 48 ) |
நகர் வளம் [புடை நகர்]
|
|
வேறு
|
|
78 |
கண்வலைக் காமுகர் என்னு மாபடுத் |
|
தொண்ணிதித் தசைதழீஇ உடலம் விட்டிடும் |
|
பெண்வலைப் படாதவர் பீடி னோங்கிய |
|
அண்ணலங் கடிநக ரமைதி செப்புவாம். |
|
(இ - ள்.) கண்வலை காமுகர் என்னும் மா படுத்து - கண்ணாகிய வலையாலே காமுகராகிய விலங்கை அகப்படுத்து; ஒள்நிதித் திசை தழீஇ உடலம் விட்டிடும் - ஒளிபெறும் செல்வமாகிய தசையைக் கைக்கொண்டு உடலைக் கைவிடும்; பெண்வலைப் படாதவர் பீடின் ஓங்கிய - பெண்ணின் சூழ்ச்சியில் அகப்படாத முனிவருடைய தவப்பயன் போலச் செல்வம் ஓங்கிய; அண்ணல்
|
|