பக்கம் எண் :

                             
காந்தருவ தத்தையார் இலம்பகம் 491 

வெல்ல; ஆங்குக் கொடியான் சித்தம் கரிந்து - அப்போது கொடியவனான கட்டியங்காரன் உள்ளம் வெந்து; வைத்த கதிர் வேலின் வலியார்க்கு உரியள் என்ன - கூரிய ஒளிமிகு வேற்போரிலே வல்லவர்க்கு இவள் உரியவள் என்றுரைத்து, செரு விளைத்தாள் - போரை உண்டாக்கினான்.

 

   (வி - ம்.) 'வை' எனக் குறிப்புணர நின்ற உரிச்சொல் 'வைத்த' என வினைமேல் தன் மெய் தடுமாறிற்று (தொல். உரி. 1. நச்.); முள்முனை போலக் கூர்த்த வேல் என்க.

 

   மனர் : மன்னர் என்பதன் விகாரம். நம்பி : முன்னிலைப் புறமொழி. சித்தம் - அறிவு. கொடியான் : கட்டியங்காரன்.

( 352 )
845 தேன்முழங்கு தார்க்குருசில் செம்பொனெடுந் தோ்மேல்
வான்முழங்கு வெஞ்சிலையின் வாளிமழை தூவி
யூன்முழங்கு வெங்குருதி வேழமுடன் மூழ்க
வேன்முழங்கு தானைவிளை யாடியதுங் கேட்டேன்.

   (இ - ள்.) தேன் முழங்கு தார்க் குருசில் செம்பொன் நெடுந்தேர் மேல் - வண்டுகள் முரலுந் தாரணிந்த சீவகன் நெடிய செம்பொற் றேர்மீது அமர்ந்து; வான் முழங்கு வெம்சிலையின் வாளி மழை தூவி - முகிலிடிபோல முழங்கும் கொடிய வில்லாலே கணை மாரி பெய்தலால்; ஊன் முழங்கு வெம்குருதி - மெய்யில் உண்டாகிப் பெருகிய குருதியிலே; வேழம் உடன் முழ்க - களிறு முற்றும் மூழ்குமாறு; வேல் முழங்கு தானை - வேலேந்தி ஆர்ப்பரித்த படைஞருடன்; விளையாடியதும் கேட்டேன் - விளையாடியதையும் தரன் கூறக் கேட்டேன்.

 

   (வி - ம்.) தூவி - தூவுதலால்; எச்சத்திரிபு 'சிலையென் வாளி' என்பதூஉம் பாடம்.

 

   தேன் - வண்டு. குருசில் : முன்னிலைப் புறமொழி. வான் : ஆகுபெயர்; இடி என்க.

( 353 )
846 வந்துதரன் கூறியவிவ் வாய்மொழியு மன்றி
முந்துவரன் மொழிந்தபொருண் முற்றும்வகை நாடிப்
1பந்துபுடை பாணியெனப் பாயுங்கலி மான்றே
ரெந்தைதிற முன்னமுணர்ந்த தின்னணம் விடுத்தேன்.

   (இ - ள்.) பந்து புடை பாணியெனப் பாயும் கலிமான் தேர் எந்தை திறம் - பந்தடியும் தாளவொற்றும் போலப் பாய்ந்து செல்லும், ஒலிக்குங் குதிரை பூட்டிய தேரையுடைய எந்தை

 

1. 'பந்துபுடைப் பன்ன பாணிப் பல்லடிச் - சில்பரிக் குதிரைப் பல்வேல் எழினி' (அகநா. 105 : 9 - 10)