காந்தருவ தத்தையார் இலம்பகம் |
494 |
|
849 |
மன்பெரிய மாமனடி மகிழ்ந்துதிசை வணங்கி |
|
அன்பினக லாதவனை விடுத்தலார்ந்த கோதைக் |
|
கின்பநிலத் தியன்றபொரு ளிவையிவைநுங் கோமான் |
|
றந்தவெனச் சொல்லிநனி சாமிகொடுத் தானே. |
|
(இ - ள்.) மன் பெரிய மாமன் அடி மகிழ்ந்து திசை வணங்கி - மிகப் பெரிய மாமன் அடியைத் திசை நோக்கி மகிழ்ந்து வணங்கி; அன்பின் அகலாதவனை விடுத்து -அன்பினால் நீங்காது நின்ற தரனை விடுத்து; அலர் கோதைக்கு - தத்தைக்கு; இன்ப நிலத்து நனி இயன்ற பொருள் நும் கோமான் தந்த இவையிவை எனச் சொல்லி - இன்ப நிலத்திற்கு நன்றாகப் பொருந்திய பொருள்களாக நின் தந்தை கொடுத்தவை இவையிவை என்று கூறி; சாமிகொடுத்தான் - சீவகன் கொடுத்தான்.
|
|
(வி - ம்.) மன்பெரிய மாமன் - மிகப் பெரிய மாமனாகிய கலுழவேகன். அன்பினகலாதவன் - தரன். இன்பநிலம் - நுகரும் துறைகள். கோமான், ஈண்டுத் தந்தை என்னும் முறைப்பெயர்ப் பொருட்டாய் நின்றது. சாமி - சீவகசாமி.
|
( 357 ) |
850 |
குங்குமமுஞ் சந்தனமுங் கூட்டியிடு கொடியா |
|
வெங்கணிள முலையின்மிசை யெழுதிவிளை யாடிக் |
|
கொங்குண்மலர்க் கோதையொடு குரிசில்செலும் வழிநா |
|
ளங்கணகர்ப் பட்டபொரு ளாகியது மொழிவாம். |
|
(இ - ள்.) குங்குமமும் சந்தனமும் கூட்டி யிடுகொடியா - குங்குமத்தையும் சந்தனத்தையுங் கலந்து தொய்யில் கொடியாக; வெம்கண் இளமுலையின் மிசை எழுதி - விருப்பூட்டும் இளமுலையின் மேல் எழுதி; கொங்கு உண்மலர்க் கோதையொடு குருசில் விளையாடி - தேன் பொருந்திய கோதையாளுடன் சீவகன் விளையாடி; செலும்வழி நாள் - செல்லும் காலத்தே; நகர் அங்கண்பட்ட பொருள் ஆகியது மொழிவாம் - நகரிலே நிகழ்ந்த நிகழ்ச்சிகளையும் சீவகன் அடைந்ததையும் கூறுவோம்.
|
|
(வி - ம்.) 'பொருளாகியது' ஒரு சொல்லுமாம்.
|
|
கூட்டி - கலந்து. இடு கொடி - எழுதுந் தொய்யிற் கொடி. கொடியா என்புழி ஆக்கச் சொல் ஈறு தொக்கது. குருசில் : சீவகன். வழிநாள். பின்னாள்கள். பட்டது - நிகழ்ந்தது. என்றது, இக்காரணத்தால் சீவகன்பால் நிகழ்ந்த செய்திகளை. பொருளாகியது : ஒரு சொன்னீர்மைத்து.
|
( 358 ) |
காந்தருவ தத்தையார் இலம்பகம் முற்றிற்று.
|
|