பக்கம் எண் :

           
குணமாலையார் இலம்பகம் 496 

   மாந்தரெல்லாம் பொழிலில் ஆடி மீண்டு வந்தனர். அப்பொழுது கட்டியங்காரன் பட்டத்து யானையாகிய அசனிவேகம் செருக்குற்றுப் பாகர்க்கடங்காமல் சிதைந்து ஓடிற்று. அதனெதிரே வந்த குணமாலையைச் சீறி அவளைக் கொல்லத் தொடங்கியது. அவ்வழியே வந்த சீவகன் விரைந்தோடி அதனை அச்சுறுத்தி ஓட்டிக் குணமாலையை உய்யக்கொண்டனன். இருவருளங்களும் ஒன்றுறக் கலந்தன. குணமாலை சீவகன்பாற் காதல் கொண்டுள்ள செய்தியை அவள் நற்றாயாகிய வினயமாலை குறிப்பானுணர்ந்து தந்தையாகிய குபேரமித்திரனுக் குணர்த்தினள். அவனும் பெரிதும் மகிழ்ந்து கந்துக்கடனிடத்தே தூதுவிட்டுத் தன் கருத்தை உணர்த்தினன். அவனும் மகிழ்ந்துடன்பட்டனன். அவ்வழி சீவகனுக்குங் குணமாலைக்கும் திருமணஞ் சிறப்பாக நிகழ்ந்தது. இருவரும் ஈருடற்கு ஓருயிராய் இணைந்து இன்புற்றனர்.

 

   இனிச் சீவகனுக்குத் தோற்றமையால் நாணிக் கவளமறுத்து நின்ற அசனிவேகத்தைக் கண்ட கட்டியங்காரன், நிகழ்ச்சியெல்லாம் வினவி அறிந்தனன். சீவகன்பாற் சீற்றங்கொண்டான். ”அவனைக் கட்டி என் முன்னர்க் கொணர்க' என மதனனை மறவருடன் ஏவினன். அவர்கள் சீவகன் இல்லத்தை வளைத்துக் கொண்டனர். சீவகன் சினந்து போராற்றப் புலிபோலப் புறப்பட்டனன்; தான் தன் ஆசிரியனுக்கு அளித்த உறுதிமொழியை நினைந்து அடங்கினன். இருமுதுகுரவரும் அரசன் ஆணைக்கு அடங்கி அவன்பாற் செல்லுதலே அறிவுடைமையாம் என்று செவியறிவுறுத்தினர். சீவகன் அக் கருத்திற் கிணங்கி அம்மறவர்க்கு அடங்கியவனாய் அவர் புடைசூழச் சென்றனன். நந்தட்டன் முதலியோர் மாற்றாரை வெல்லுதற்குரிய சூழ்ச்சியை ஆராய்ந்தனர்.

 

   இஃதறிந்த காந்தருவதத்தை தன் மந்திர வன்மையால் சீவகனைச் சிறைவீடு செய்ய முயன்றனள். அவள் கருத்தறிந்த சீவகன் நாணினன். சுதஞ்சணனை நினைத்தான். சீவகனுக்குற்ற துன்பத்தைச் சுதஞ்சணன் தனது தெய்வ ஞானத்தால் உணர்ந்து, ஞெரேலெனக் காற்றையும் மழையையும் தோற்றுவித்து மதனன் முதலியோரை நிலைகுலைத்துப் பிறர் உணராதபடி சீவகனைத் தன் மார்போடு அணைத் தெடுத்துக் கொண்டு தன் பதியை எய்தினன். அவ்விடத்தே தமர்க்கெல்லாம் இவன் சிறப்பினை உணர்த்தினன்; இவ்வாற்றால் சீவகன் சுதஞ்சணனோடு அவன் ஊரில் இனிதே உறைவானாயினன்.

 

   இனி, மதனன் சீவகன் எவ்வழி மறைந்தான்? என்றுணராதவனாய்த் திகைத்தனன். கட்டியங்காரன் தன்னைக் கடிவான்