பக்கம் எண் :

                       
குணமாலையார் இலம்பகம் 497 

   என்றஞ்சி ஏதிலான் ஒருவனை வாளாற் கொன்று உருத்தெரியாமல் புரட்டிவிட்டுக் கட்டியங்காரன் பாற் சென்று ”அரசே! மழையும் காற்றும் மிக்கமையால் சீவகனை உயிருடன் கொணர்தல் அருமையாயிற்று. ஆதலால் அவனைக் கொன்று வீழ்த்திவிட்டேன்” என்றனன். அதுகேட்ட கட்டியங்காரன் மதனனைப் பாராட்டிச் சிறப்புகள் பலவும் நல்கினான்.

 
851 காசறு துறவின் மிக்க கடவுளர் சிந்தை போல
மாசறு விசும்பின் வெய்யோன் வடதிசை யயண ழன்னி
ஆசற நடக்கு நாளு ளைங்கணைக் கிழவன் வைகிப்
பாசறைப் பரிவு தீர்க்கும் பங்குனிப் பருவஞ் செய்தான்.

   (இ - ள்.) காசு அறு துறவின் மிக்க கடவுளர் சிந்தை போல - குற்றம் அற்ற, துறவு நெறியிற் சிறப்புற்ற முனிவரின் உள்ளம்போல; வெய்யோன் மாசு அறு விசும்பின் வடதிசை அயணம் முன்னி - கதிரவன் தூய வானிலே வடதிசைச் செலவைக் கருதி; ஆசு அற நடக்கும் நாளுள் - நலம்பெறச் செல்லும் நாட்களிலே; ஐங்கணைக் கிழவன் வைகி - காமன் தான் தங்குவதற்கு; பாசறைப் பரிவு தீர்க்கும் - பாசறையிலே தங்கியிருப்போரின் வருத்தத்தை நீக்கும; பங்குனிப் பருவம் செய்தான் - இளவேனிற் காலத்தைப் பிறப்பித்தான்.

 

   (வி - ம்.) 'அயனம்' என்னாமல் 'அயணம்' என்று பாகதத்தாற் கூறினார் செய்யுட் சொல்லாதலின். வைகி - வைக : எச்சத் திரிபு. கூதிர்க் காலத்தே (போர்மேற் சென்றோர்) பாடி வீட்டிலிருந்து, இளவேனிற்கண் இன்பம் நுகர மனைதிரும்புவாராதலின், 'பாசறைப் பரிவு தீர்க்கும்' என்றார்.

 

   'தலை வந்த திளவேனில்' (சீவக, 948) என எதிர்நோக்கிக் கூறிய காலத்தே, ஈண்டு நீர்விளையாட்டு நிகழ்கின்றதென்பர், அக்காலத்தைச் சிறப்பித்துரைக்கின்றார்.

 

   உலகின்கண் கார்முதலிய பருவங்கள் உண்டாதற்கு ஞாயிற்று மண்டிலத்தின் வடதிசைச் செலவும் தென்றிசைச் செலவும் காரணமாதல்பற்றி வெய்யோன் பருவம் செய்தான் என அவன் செயலாக்கிக் கூறினர்.

 

   விசும்பிற்குக் கடவுளர் சிந்தை உவமை. ஐங்கணைக் கிழவன் - காமன்.

( 1 )
852 தோடணி மகளிர் போன்ற
  துணர்மலர்க் கொம்பர் கொம்பி
னாடவர் போல வண்டு
  மடைந்தன வளியிற் கொல்கி.