பக்கம் எண் :

                       
குணமாலையார் இலம்பகம் 498 

852 யூடிய மகளிர் போல
  வொசிந்தன வூட றீர்க்குஞ்
சேடரிற் சென்று புல்லிச்
  சிறுபுறந் தழீஇய தும்பி.

   (இ - ள்.) துணர்மலர்க் கொம்பர் தோடு அணி மகளிர் போன்ற - கொத்தாகிய மலர்க்கொம்புகள் மலரணிந்த மகளிரைப் போன்றன; ஆடவர்போல வண்டும் கொம்பின் அடைந்தன - மகளிரிடம் ஆடவர் அடையுமாறுபோல வண்டுகளும் மலர்க் கொம்புகளிடத்தே சேர்ந்தன; ஊடிய மகளிர்போல அளியிற்கு ஒல்கி ஒசிந்தன - ஆடவரிடத்தே ஒசிந்து ஊடிய பெண்களைப் போல அவ் வண்டுகளின் கனத்திற்கு அக் கொம்புகள் ஒரு பக்கத்தே தாழ்ந்தன; ஊடல் தீர்க்கும் சேடரின் தும்பி சென்று புல்லிச் சிறுபுறம் தழீஇய - அவர் ஊடலைத் தீர்த்து எதிர்முகம் ஆக்கும் பெரியோரைப் போலத் தும்பிகள் சென்று அங்ஙனம் உயர்ந்த சிறுபுறத்தைத் தழுவி ஒக்க நிறுத்தின.

 

   (வி - ம்.) சிறுபுறம் : பூங்கொம்பு வளைந்தபோது உயர்ந்திருந்த பக்கம். 'சொல்லிய கிளவி அறிவர்க்கும் உரிய' (தொல். கற்பு 13) என்றலின் அறிவிற் பெரியோரைச் சேடர் என்றார். அளியிற்கு; பிறர்க்கும் இவ்வாறு அருளுளதாம் என்று புலவி நுணுக்கங் கொள்ளுதலை மகளிர்க்குக் கொள்க. அளி - அருள், வண்டு.

 

   வளியிற்கு - காற்றிற்கு. எனினுமாம். மலர்க்கொம்பர் மகளிர் போன்ற என்க. சேடர், சேடு என்னும் பண்படியாகப் பிறந்த பெயர்; பெரியோர் என்னும் பொருட்டு. தும்பி - வண்டினத்தில் ஒருவகை.

( 2 )

வேறு

 
853 நான மண்ணிய நன்மண மங்கையர்
மேனி போன்றினி தாய்விரை நாறிய
கானங் காழகி லேகமழ் கண்ணிய
வேனி லாற்கு விருந்தெதிர் கொண்டதே.

   (இ - ள்.) நானம் மண்ணிய நல்மண மங்கையர் மேனி போன்று - கத்தூரி பூசப்பெற்ற, நல்ல மணஞ்செய்த மகளிரின் மேனிபோன்று; இனிதாய் விரை நாறிய கானம் - இனிமையாய் மணம் கமழ்ந்த சோலை; காழ் அகிலே கமழ் கண்ணிய வேனிலாற்கு - கரிய அகில் மணமே கமழுங் கண்ணியையுடைய காமனுக்கு; விருந்து எதிர்கொண்டது - விருந்திடுதலை மேற்கொண்டது.

 

   (வி - ம்.) கண்ணி - முடிமாலை. கண்ணிய - மாலையை உடைய.