| குணமாலையார் இலம்பகம் |
501 |
|
|
மருப்பு ஏந்து கஞ்சிகை வையம் - ஒளிவிடும் யானைக் கொம்பினால் ஏந்திய, உருவு திரையையுடைய வண்டியும்; இளவெயில் போந்து காய் பொன் சிவிகை - இளவெயில் விட்டு ஒளிரும் பொன் சிவிகையும்; நல்போதகம் கூந்தல் மாலைக் குமரிப் பிடிக்குழாம் - அழகிய யானைகளும் கூந்தலையும் மாலையையும் உடைய இளம் பிடித்திரளும் (ஆகியவற்றை).
|
|
|
(வி - ம்.) இப் பாட்டுக் குளகம். கடத்தற்கருமையின் 'நீந்தும்' என்றார்.
|
|
|
நித்தில ஊர்தி - முத்தாலாய நடைப்பந்தர். நிழல் - ஒளி. கஞ்சிகை வையம் - உருவுதிரை வீழ்த்தப்பட்டவண்டி; இதனைக் கொல்லாவண்டி என்ப. இளவெயில் போன்று புறப்பட்டு ஒளிரும் பொன் சிவிகை எனினுமாம். போதகம் - யானை. குமரிப்பிடி - இளமையுடைய பெண் யானை.
|
( 8 ) |
| 859 |
ஏறு வாரொலி யேற்றுமி னோவெனக் |
| |
கூறு வாரொலி தோடு குலைந்துவீழ்ந் |
| |
தாறி னார்ப்பொலி யஞ்சிலம் பின்னொலி |
| |
மாறு கொண்டதொர் மாக்கட லொத்தவே. |
|
|
(இ - ள்.) ஏறுவார் ஒலி - ஏறுகின்றவரின் ஆரவாரமும் ; தோடு குலைந்து வீழ்ந்து ஏற்றுமினோ எனக் கூறுவார் ஒலி - தம் கூட்டம் சிதறியதால் அதனையடைய விரும்பி ஏற்றிவிடுங்கள் என்று கூறுகின்றவரின் ஆரவாரமும்; ஆறின் ஆர்ப்பு ஒலி - வழியே செல்லுவாரின் ஒலியும்; அம் சிலம்பின் ஒலி - அழகிய சிலம்புகளின் ஆர்ப்பும் (கூடுவதால்); மாறு கொண்டது ஓர் மாக்கடல் ஒத்தது - கடலுடன் மாறுபட்ட மற்றொரு பெருங் கடல் போன்றது.
|
|
|
(வி - ம்.) தோடு - கூட்டம். ”சிறுதலை வெள்ளைத்தோடு” என்னும் குறுந்தொகைக் கண்ணும் (163) அஃதப் பொருட்டாதலறிக. ஆறு : ஆகுபெயர்; வழிப்போக்கர் என்க
|
( 9 ) |
| 860 |
பொன்செய் வேய்த்தலைப் பூமரு மண்டல |
| |
மின்செய் வெண்குடை பிச்ச மிடைந்தொளி |
| |
யென்செய் கோவென் றிரிந்த திழைநிலா |
| |
மன்செய் மாணகர் வட்டம்விட் டிட்டதே. |
|
|
(இ - ள்.) பொன்செய் வேய்த்தலைப் பூமரு மண்டலம் - பொன்னாற் செய்யப்பட்ட காம்பினைக் கொண்ட, பூ எழுதிய வட்டக்குடையும்; மின்செய் வெண்குடை - ஒளிரும் வெண்குடையும்; பிச்சம் - பீலிக்குடையும்; மிடைந்து - நெருங்குதலால்; ஒளி என் செய்கோ என்று இரிந்தது - (ஞாயிற்றின்) ஒளி
|
|