| குணமாலையார் இலம்பகம் | 
504  | 
 
  | 
 
| 
    (இ - ள்.) பாடல் ஓசையும் - பாட்டொலியும்; பண் ஒலி ஓசையும் - யாழ் வாசிக்கும் ஒலியும்; ஆடல் ஓசையும் - ஆட்டத்தினால் வந்த இயங்களின் ஒலியும்; ஆர்ப்பு ஒலி ஓசையும் - ஆரவாரத்தின் ஒலியும் ; ஓடை யானை உரற்று ஒலி ஓசையும் - முகபட்டம் அணிந்த களிறுகள் பிளிறும் ஒலியாற் பிறந்த ஓசையும்; ஊடுபோய் உயர் வான் உலகு உற்றவே - தம்முள் விரவிச் சென்று வானுலகை அடைந்தன. 
 | 
  | 
 
| 
    (வி - ம்.) பாடல் - மிடற்றுப் பாடல். பண் ஈண்டு ஆகுபெயர், யாழ் நரம்பென்க. ஒலியோசை: வினைத்தொகை; உரற்றொலியுமது. ஊடுபோதல் - ஒன்றனோடொன்று விரவிப்போதல். 
 | 
( 15 ) | 
 
 
|  866 | 
பூக்க ணீர்விளை யாடிய பொன்னுல |  
|   | 
கோக்க நீள்விசும் பூடறுத் தொய்யென |  
|   | 
வீக்க மாநகர் வீழ்ந்தது போன்றவண் |  
|   | 
மாக்கண் மாக்கடல் வெள்ள மடுத்ததே. | 
 
 
 | 
 
| 
    (இ - ள்.) பொன் உலகு பூக்கள் நீர் விளையாடிய - பொன்னுலகு பூக்களையுடைய நீரிலே விளையாடுவதற்கு; ஓக்கம் நீள் விசும்பு ஊடு அறுத்து - உயர்ந்த நீண்ட வானத்தை ஊடறுத்து வந்து; வீக்கம் மாநகர் ஒய்யென விரைய வீழ்ந்தது போன்று - வளமிகுந்த பெரிய நகரில் விரைய வீழ்ந்ததுபோல்; அவண் மாக்கள் மாக்கடல் வெள்ளம் மடுத்தது - அங்கே மக்கள் திரளாகிய பெருங்கடல் வெள்ளத்தை நோக்கிச் சென்றது. 
 | 
  | 
 
| 
    (வி - ம்.) பூக்கண்ணீர் - பூவாகிய கண்களையுடைய நீரெனினுமாம். விளையாடிய: செய்யியவென்னும் எச்சம்; விளையாட என்க. ஓக்கம் - உயர்ச்சி. உயர்ச்சியையுடைய நீண்ட விசும்பென்க, ஒய்யென - விரைவுக் குறிப்பு. மாக்கண், மாக்கடல் : பண்புத்தொகை. 
 | 
( 16 ) | 
 
 
|  867 | 
மின்னு வாட்டடங் கண்ணியர் வெம்முலைத் |  
|   | 
துன்னு வாட்டந் தணித்தலிற் றூநிறத் |  
|   | 
தன்ன வாட்டத் தணிமலர்ப் பூம்பொழி |  
|   | 
லென்ன வாட்டமு மின்றிச்சென் றெய்தினார். | 
 
 
 | 
 
| 
    (இ - ள்.) மின்னு வாள்தடம் கண்ணியர் வெம்முலைத்துன்னு வாட்டம் - ஒலிசெயும் வாளனைய பெருங்கண்ணியரின் வெம்முலைகள் நெருங்குதலால் உண்டான மெய்வருத்தத்தை; தூநிறத்து அன்ன ஆட்டத்து அணிமலர்ப் பூம்பொழில் - தூய நிறமுடைய அன்னங்களின் விளையாட்டினையுடைய அழகிய மலர்ப்பொழில்; தணித்தலின் - போக்குவதனால்; என்ன வாட்டமும் இன்றிச் சென்று எய்தினார் - எத்தகைய சோர்வும் இன்றிச் சென்று அடைந்தனர். 
 | 
  |