| குணமாலையார் இலம்பகம் | 
506  | 
 
  | 
 
 
|  870 | 
கள்ள வானர முங்கன்னி யூகமுந் |  
|   | 
துள்ளு மானொடு வேழத் தொகுதியும் |  
|   | 
வெள்ளை யன்னமுந் தோகையும் வேய்ந்தவ |  
|   | 
ணுள்ளு மாந்தரை யுள்ளம் புகற்றுமே. | 
 
 
 | 
 
| 
    (இ - ள்.) கள்ள வானரமும் - திருட்டுப் பண்புடைய குரங்கையும்; கன்னி யூகமும் - கன்னித் தன்மையுடைய கருங்குரங்கையும்; துளளும் மானொடு வேழத் தொகுதியும் - துள்ளும் மான்களையும், யானைத் திரள்களையும்; வெள்ளை அன்னமும் தோகையும் வேய்ந்து - வெள்ளைநிற அன்னத்தையும் மயிலையும் அணிந்து; அவண் உள்ளும் மாந்தரை - அவ்விடம் தம் துணையை நினைக்கும் மக்களை; உள்ளம் புகற்றும் - நெஞ்சில் விருப்பமூட்டும். 
 | 
  | 
 
| 
    (வி - ம்.) பிறர் பொருளைக் கவர்ந்துகோடலின் கள்ள வானரம் என்றார். கன்னியூகம் - கன்னிமையுடைய பெண்குரங்கு. தோகை: ஆகுபெயர்; மயில். உள்ளும் மாந்தர் என்றது தங்காதற்றுணைவரை நினைக்கும் மாந்தர் என்பதுபட நின்றது. 
 | 
( 20 ) | 
 
 
|  871 | 
கோக்க ணங்கொதித் தேந்திய வேலென |  
|   | 
நோக்க ணங்கனை யார்நுகர் - வேய்தலிற் |  
|   | 
றாக்க ணங்குறை யுந்தடந் தாமரைப் |  
|   | 
பூக்க ணம்பொழிற் பட்டது போன்றதே. | 
 
 
 | 
 
| 
    (இ - ள்.) கோக்கணம் கொதித்து ஏந்திய வேல் என - மன்னர் குழாம் சினந்து ஏந்திய வேல்போல; நோக்கு அணங்கு அனையார் நுகர்வு ஏய்தலின் - நேர்ககுகின்ற நோக்கினையுடைய தெய்வ மகளிர் போன்றவர் தம் கணவரிடம் நுகர்ச்சியால் அவர்களின் உறுப்புக்கள் செவ்விபெறுதலின்; தாக்கு அணங்கு உறையும் தடம் தாமரைப் பூக்கணம் - திருமகள் தங்கும் பெரிய தாமரைப் பூக்களின் தொகுதி; பொழில் பட்டது போன்றது - (நீர் நிலையினின்றும் நீங்கி) ஒரு பொழிலிலே தோன்றினதைப் போன்றது. 
 | 
  | 
 
| 
    (வி - ம்.) நோக்குதலால் அணங்கனையாருமாம். முகம் முதலிய தாமரைக்குவமை. 
 | 
  | 
 
| 
    கோக்கணம் - அரசர் குழாம். வேலென நோக்கும் நோக்கினையுடைய அணங்கு அனையார் என்க. வேல் - கண்ணிற்குவமை. ஏய்தல் - இயைதல். தாக்கணங்கு என்றது - திருமகளை. 
 | 
( 21 ) | 
 
 
|  872 | 
கூறப் பட்டவக் கொய்ம்மலர்க் காவக |  
|   | 
மூறித் தேன்றுளித் தொண்மது வார்மண |  
|   | 
காரி நாண்மலர் வெண்மணற் றாய்நிழ |  
|   | 
றேறித் தெண்கயம் புக்கது போன்றதே. | 
 
 
 |