பக்கம் எண் :

                     
குணமாலையார் இலம்பகம் 507 

   (இ - ள்.) கூறப்பட்ட அக் கெய்ம்மலர்க் காவகம் - (இது வரை) கூறப்பட்ட அம் மலர்ப் பொழிலினுள்ளாகிய இடம்; தேன் ஊறித் துளித்து ஒண்மது ஆர் மணம் நாறி - தேன் ஊறித் துளித்து, அவ் வொள்ளிய தேனில் நிறைந்த மணம் எங்கும் கமழ்ந்து; நாள் மலர் வெண்மணல் தாய் - புதிய மலர்களும் வெண்மையான மணலும் பரவி; நிழல் தேறி - நிழல் தெளிந்து; தெண் கயம் புக்கது போன்றது - (இக் குளிர்ச்சியால்) தெளிந்த குளத்திலே சென்றாற் போன்றது.

 

   (வி - ம்.) கொய்ம்மலர் : வினைத்தொகை. காவகம் ஊறித் துளித்து நாறிமணல்தாய்த் தன்கண் புக்கவர்க்குக் குளிர்ச்சியால் கயம் போன்றது என்க. தேறி - தெளிந்து. தெண்கயம் - தெளிந்த நீரையுடைய குளம்.

( 22 )
873 காவிற் கண்டத் திரைவளைத் தாயிடை
மேவி விண்ணவர் மங்கையர் போன்றுதம்
பூவை யுங்கிளி யும்மிழற் றப்புகுந்
தாவி யந்துகி லாரமர்ந் தார்களே.

   (இ - ள்.) ஆவி அம் துகிலார் - பாலாவி போலும் துகிலையுடைய குணமாலையும் சுரமஞ்சரியும்; காவில் கண்டத் திரை வளைத்து - அப் பொழிலில், பலநிறக் கூறுபட்ட திரையை வளைத்து; ஆயிடை தம் பூவையும் கிளியும் மிழற்றப் புகுந்து - அங்கே தம்முடைய பூவையும் கிளியும் மழலை மொழியப் புகுந்து; விண்ணவர் மங்கையர் போன்று - வானவர் மகளிர் போல; மேவி அமர்ந்தார்கள் - விருப்பத்துடன் இருந்தனர்.

 

   (வி - ம்.) ஆவியத்துகிலார்: எழுவாய. அவர் குணமாலையும் சுரமஞ்சரியும் என்பது அடுத்த செய்யுளான் விளங்கும். கண்டத்திரை - பலவண்ணங்களாற் கூறுபட்டதிரை (வண்ணத் திரை) பூவை - நாகண வாய்ப்புள்.

( 23 )
874 பௌவ நீர்ப்பவ ளக்கொடி போல்பவண்
மௌவ லங்குழ லாள்சுர மஞ்சரி
கொவ்வை யங்கனி வாய்க்குண மாலையோ
டெவ்வந் தீர்ந்திருந் தாளிது கூறினாள்.

   (இ - ள்.) பௌவ நீர்ப் பவளக்கொடிபோல்பவள் - கடல் நீரிலே தோன்றிய பவளக்கொடி போன்றவளாகிய; மௌவல் அம் குழலாள் சுருமஞ்சரி - முல்லை மலரணிந்த கூந்தலையுடைய சுரமஞ்சரி; கொவ்வை அம் கனிவாய்க் குணமாலையோடு - கொவ்வைக் கனி அனைய வாயுடையாள் குணமாலையோடு; எவ்வம் தீர்ந்து இருந்தாள் இது கூறினாள் - வழிவந்த வருத்தம் தீர்ந்து இப்போது இதனைக் கூறினாள்.