| குணமாலையார் இலம்பகம் |
508 |
|
|
(வி - ம்.) பௌவநீர்ப்பவளக்கொடி - சுரமஞ்சரிக்குவமை. இஃது அவள் குலநலமும் அழகு நலனும் குறித்துவந்த உவமை என்க. மௌவல் - முல்லை. மௌவல்குழலாள் என்றது அவள் கற்புநலம் கூறிற்று.
|
( 24 ) |
| 875 |
தூமஞ் சூடிய தூத்துகி லேந்தல்குற் |
| |
றாமஞ் சூடிய வேற்றடங் கண்ணினா |
| |
ணாமஞ் சூடிய நன்னுத னீட்டினாள் |
| |
காமஞ் சூடிய கண்ணொளிர் சுண்ணமே. |
|
|
(இ - ள்.) தூமம் சூடிய தூரத்துகில் ஏந்து அல்குல் - அகிற் புகை தாங்கிய தூய ஆடையைத் தாங்கிய அல்குலையும்; தாமம் சூடிய வேல் தடம் கண்ணினாள் - மாலை யணிந்த வேலனைய பெருங கண்களையும் உடையவள் ஆகிய குணமாலையின்; நாமம் சூடிய நன்னுதல் - பெயரைக் கொண்ட அழகிய நெற்றியை உடைய தோழி; காமம் சூடிய கண் ஒளிர் சுண்ணம் நீட்டினாள் - விருப்பத்தைக் கொண்ட, கண்ணுக்கு ஒளியான சுண்ணப் பொடியைக் காட்டினாள்.
|
|
|
(வி - ம்.) நச்சினார்க்சினியா இச் செய்யுளினையும் முன் செய்யுளையும் (874 - 875) ஒரு தொடராக்கிக் கொண்டுகூட்டிக் கூறும் உரை:
|
|
|
அங்ஙனம் இருந்த காலத்தே குணமாலை பெயரைச் சுமந்த மாலையென்னுஞ் சேடி, எல்லோரும் விரும்புந் தன்மையை மேற்கொண்ட சுண்ணத்தை நீட்டினாள்; அது கண்டு கொடிபோல் வாள் குழலாள் சுரமஞ்சரி, அவள் குணமாலையுடனே இவ் வார்த்தையைக் கூறினாள்.
|
( 25 ) |
| 876 |
சுண்ண மென்பதோர் போ்கொடு சோர்குழல் |
| |
வண்ண மாலை நுசுப்பு வருத்துவா |
| |
னெண்ணி வந்தன கூறிவை யோவென |
| |
நண்ணி மாலையை நக்கன ளென்பவே. |
|
|
(இ - ள்.) சோர்குழல் வண்ண மாலை - சோர் குழலையுடைய குணமாலையே!; சுண்ணம் என்பது ஓர் பேர் கொடு - சுண்ணம் என்பதாகிய ஒரு பேரைக் கொண்டு; நுசுப்பு வருத்துவான் எண்ணி வந்தன - (சுமப்போர்) இடையை வருத்த நினைத்து (நின் சுண்ணம்) வந்தனபோலும்!; இவையோ! - (என் சுண்ணமாகிய) இவை யாகுமோ நின் சுண்ணம்?; கூறு என - சொல்லென்று; மாலையை நண்ணி நக்கனள் - குணமாலையை நெருங்கிய நகையாடினாள்.
|
|
|
(வி - ம்.) என்ப, ஏ : அசைகள். நச்சினார்க்கினியர். 'குழலையும் நுசுப்பையும் உடைய மாலாய் ! இவை சுண்ண மென்னும் பெயரை ஏறட்டுக்கொண்டு நின்னை வருத்துவான் கருதி வந்தனவோ என்றணுகி அவளைத் தான் நக்காள். நக்கு, 'சொல்லின், என்னுடைய சுண்ணங்களைச் சொல்லாய்”, எனச் சொன்னாள்” என்று கொண்டு கூட்டி உரைப்பர்.
|
( 26 ) |