பக்கம் எண் :

நாமகள் இலம்பகம் 51 

   என்னும்] இகர ஈறு ['கூய்' எனத்] திரிந்தது. இனி மேலிற் கவிக்கும் [கண்வலை] பொருந்த மயிலை 1உவமத்தொகைக்கண் வந்த ஆகுபெயரென்று மகளிராக்கி மகளிர் குயிலொடு மாறு கூவினார் என்றுரைப்பதும் ஒரு பொருள். இனிச் சண்பகத்தின் தேன்துளித்தலின் காரென்று 2மயிலொடு மயிலும், வேனிலாதலிற் குயிலொடு குயிலும் கூவிற்றென்றுமாம். சிறுபான்மையில் கூவிற்றென்றலும் மரபு.

( 50 )
80 கைபுனை சாந்தமுங் கடிசெய் மாலையு
மெய்புனை சுண்ணமும் புகையு மேவிய
நெற்யொடு குங்கும நிறைந்த நாணினாற்
பொய்கைகள் பூம்படாம் போர்த்த போன்றவே.

   (இ - ள்.) கைபுனை சாந்தமும் - கையிற் புனைந்த சந்தனமும்; கடிசெய் மாலையும் -மணமிகு மாலையும்; மெய்புனை சுண்ணமும் - மெய்யில் அணிந்த சுண்ணப்பொடியும்; புகையும் - கூந்தலுக் கூட்டிய நறுமணப் புகையும்; மேவிய நெய்யொடு குங்குமம் - மெய்யிற் பூசிய புழுகுடன் குங்குமமும்; நிறைந்த பொய்கைகள் - நிறைந்த வாவிகள்; நாணினால் பூம்படாம் போர்த்த போன்ற - நாணத்தினாற் பொலிவு மிகும் ஆடையைப் போர்த்த தன்மையை ஒத்தன.

 

   (வி - ம்.) மேவிய நெய் - பூசின புழுகு. குங்குமம் - குங்குமமும். இவை குளிப்பார் அணிந்தன.

 

   இனிப், பிறர் மாசுபட்டதென்னும் நாணினாலே பூவாகிய படாம் போர்த்ததுவுமாம்.

( 51 )
81 கடிநலக் கரும்பொடு காய்நெற் கற்றையின்
பிடிநலந் தழீஇவரும் பெருங்கைக் குஞ்சர
மடிநிலை யிருப்பெழு வமைந்த கன்மதிட்
புடைநிலை வாரிகள் பொலிந்த சூழ்ந்தவே.

   (இ - ள்.) கடிநலக் கரும்பொடு காய்நெற் கற்றை - விளக்கமான நலந்தரும் கரும்பும் முற்றிய நெல் தொகுதியும் ஆகிய; இன்பிடி நலம் தழீஇ வரும் பெருங்கைக் குஞ்சரம் - இனிய கவளத்தின் நலத்தை விரும்பி வரும் நீண்ட துதிக்கையையுடைய களிறுகள் நிற்றலையுடைய; அடிநிலை இருப்பு எழு அமைந்த - அடியிளகாமல் நிற்றலையுடைய கணையமரம் அமைந்த, நன்மதிள் புடைநிலை வாரிகள் - நல்ல மதிலின் உட்புறத்திலே நிலைபெற்ற யானைக் கூடங்கள்; பொலிந்த சூழ்ந்த - பொலிவுடன் சூழ்ந்துள்ளன.

 

   (வி - ம்.) பெருங்கையாவது : நிலந்தோய் துதிக்கை. வாரி - யானைக்கூடம். இவை மதிலின் உட்புறத்தே அமைந்துள்ளன. எழு

 

1. உவமையாகு பெயர். 2. இப்பொருளே சிறப்புடையது.