| குணமாலையார் இலம்பகம் |
510 |
|
|
(இ - ள்.) மல்லிகை மாலை மணம் கமழ் வார்குழல் கொல் இயல் வேல்நெடுங் கண்ணியர் கூடி - மல்லிகை மாலையும் மணம் வீசும் நீண்ட குழலும் உடைய, கொல்லும் தன்மையுடைய வேலனைய நீண்ட கண்ணியர் இருவரும் கூடி; சொல் இசை மேம்படு சுண்ண உறழ்ச்சியுள் - சொல்லும் புகழிலே உயர்ந்த சுண்ண மாறுபாட்டிலே; சூது வெல்வது என வேண்டி விடுத்தார் - ஐயத்தை ஒழிப்பது என்று விரும்பித் தம் பணிப் பெண்களை அவற்றைக் காட்டி வருமாறு போகவிட்டனர்.
|
|
|
(வி - ம்.) 'சுண்ணத்தினது மாறுபாட்டிலே வெல்லுமது நமக்குச் சொல்லும் புகழ் மேம்படும் வெற்றியென்று அவ் வெற்றியை விரும்பிப் போகவிட்டார்' என்று கொண்டு கூட்டியுரைப்பர் நச்சினார்க்கினியர்.
|
|
|
சூது - ஐயம். கொல் - கொற்றொழிலுமாம்.
|
( 29 ) |
| 880 |
இட்டிடை யாரிரு மங்கைய ரேந்துபொற் |
| |
றட்டிடை யந்துகில் மூடிய தன்பினர் |
| |
நெட்டிடை நீந்துபு சென்றனர் தாமரை |
| |
மொட்டன மென்முலை மொய்குழ லாரே. |
|
|
(இ - ள்.) தாமரை மொட்டு அன மென்முலை மொய்குழலார் - தாமரை அரும்பனைய மென்முலையுடைய செறிந்த கூந்தலார் ஆகிய கனகபதாகை, மாலை என்போர்; இடு இடையார் இரு மங்கையர் ஏந்து பொன் தட்டிடை - நுண்ணிடையாராகிய இரு பணிப்பெண்கள் ஏந்திய (சுண்ணம் வைத்த) பொன் தட்டின்மேல்; அம் துகில் மூடி - அழகிய துணிகொண்டு மூடி; அதன்பினர் - சுண்ணத்தின் பின்னர் ; நெடுஇடை நீந்துபு சென்றனர் - நெடுந்தொலைவாக (மக்கள் திரளை) நீந்திச் சென்றனர்.
|
|
|
(வி - ம்.) கனகபதாகை - சுரமஞ்சரியின் தோழி. மாலை - குணமாலையின் தோழி. இட்டிடையார் - சுரமஞ்சரியும் குணமாலையும் எனவும். இரு மங்கையர் கனகபதாகை, மாலை எனவும், மொய்குழலார் சேடியர் எனவும் நச்சினார்க்கினியர் கூறுவர்.
|
( 30 ) |
வேறு
|
|
| 881 |
சீர்தங்கு செம்பொற் கொடிமல்லிகை |
| |
மாலை சோ்ந்து |
| |
வார்தங்கு பைம்பொற் கழன்மைந்தர்கைக் |
| |
காட்ட மைந்த |
| |
ரோ்தங்கு சுண்ண மிவற்றின்நலம் |
| |
வேண்டின் வெம்போர்க் |
| |
கார்தங்கு வண்கைக் கழற்சீவகற் |
| |
காண்மி னென்றார். |
|